காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் திருவள்ளுவர் சிலை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு சொந்தமான பூங்காவில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருக்கிறது. அதுமட்டுமின்றி, பூங்காவில் சிலை அமைக்கப்பட்டிருந்த பீடம் நேற்றிரவு உடைக்கப்பட்டு, வள்ளுவர் சிலை கடத்திச் செல்லப்பட்டு இருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் இச்செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்போரூர் பேரூராட்சிப் பூங்காவில் சிலை அமைப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அவ்வாறு இருக்க திருவள்ளூவர் சிலை அமைக்க மாவட்ட நிர்வாகம் முட்டுக்கட்டை போடுவதன் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த விஷயத்தில் சிலை அமைப்பாளர்களோ, பேரூராட்சி நிர்வாகமோ எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. சாலையோரத்தில் உள்ள அப்பூங்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பெயரை பேரூராட்சி நிர்வாகம் சூட்டியது. திருவள்ளுவர் பெயர் கொண்ட பூங்காவில் அவரது சிலை இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் தான் அதற்கான ஏற்பாடுகளை தமிழ் சங்கம் மேற்கொண்டது. இதற்கு அனுமதி அளித்து கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், ஒப்புதலுக்காக தமிழக அரசுக்கும் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இரு ஆண்டுகளாக அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி கடந்த ஜூலை 29&ஆம் தேதி மீண்டும் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எந்தநேரமும் அனுமதி கிடைக்கலாம்; அடுத்த நாளே சிலையை திறக்கலாம் என்று தமிழ்ச் சங்க நிர்வாகிகளும், பேரூராட்சி நிர்வாகமும் காத்திருந்த நிலையில் தான் செங்கல்பட்டு கோட்டாட்சியரும், மாமல்லபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரும் இரவோடு இரவாக திருப்போரூர் சென்று, பீடத்தை உடைத்து திருவள்ளுவர் சிலையை கடத்திச் சென்றுள்ளனர். இது சர்வாதிகாரத்தின் உச்சமாகும்.
தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு திருவள்ளுவர் சிலையை ஹரித்துவாரில் நிறுவி திறக்க அனுமதி மறுக்கப்பட்ட போது நான் தான் முதன்முதலில் கண்டனம் தெரிவித்தேன். அதைத்தொடர்ந்து தான் முதலமைச்சரும், மற்ற தலைவர்களும் உத்தர்காண்ட் அரசைக் கண்டித்தனர். அதேபோல், பெங்களூரில் திருவள்ளுவர் சிலை முட்டுக்கட்டைகள் போடப்பட்ட போது, முந்தைய திமுக ஆட்சியில் இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்தி, கன்னட அறிஞர் சர்வக்ஞரின் சிலை சென்னையிலும், திருவள்ளுவரின் சிலை பெங்களூரிலும் திறக்கப்பட்டன. ஆனால், அதைவிட மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்த உலகுக்கு அளித்த திருவள்ளுவருக்கு சிலை அமைக்க தமிழகத்தில் தடை விதிக்கப்படுவதை விட வெட்கக்கேடு எதுவும் இருக்க முடியாது. தமிழகத்திலேயே திருவள்ளுவருக்கு சிலை அமைக்க அனுமதி மறுக்கப் பட்டால், அதன்பின் உலகில் வேறு எங்கும் திருவள்ளுவர் சிலை அமைக்க முடியாமல் போய்விடும்.
எனவே, இந்த விஷயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக தலையிட்டு, திருப்போரூர் பூங்காவில் திருவள்ளுவர் சிலையை உடனடியாக நிறுவி திறப்பு விழா நடத்த ஆணையிட வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.