‘‘ ‘வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வோர் இந்தியருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும்’ என மோடி கூறியிருந்தாரே, அந்தப் பணம் என்னாச்சு’’ என ராஜஸ்தானைச் சேர்ந்த கண்ஹையா லால் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் பதில் அளிக்க முடியாமல் திணறுகிறது.
‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வோர் இந்தியருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்போம்’’ எனக் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் சூளுரைத்தனர். ரூ.15 லட்சம் கிடைத்தால் லைப் ஸ்டைலே மாறிவிடும் என்ற நம்பிக்கையில் பலர் பா.ஜ.க-வுக்கு ஓட்டளித்தனர்.
மோடி பிரதமராகி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வோர் இந்தியருக்கும் ரூ.15 லட்சம் என்ற ஜிமிக்கி வாக்குறுதி பகல் கனவாகிவிட்டது. இந்த நிலையில் ராஜஸ்தானைச் சேர்ந்த கண்ஹையா லால், ‘‘மோடி, இந்த ரூ.15 லட்சம் பணத்தை எப்போது தருவீர்கள்’’ என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். கண்ஹையா லாலின் கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் பிரதமர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பியிருந்தது.
ரூ.15 லட்சம்தான் கிடைக்கவில்லை. அந்தப் பணம் என்னவாச்சு என, தான் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலாவது கிடைக்கும் என கண்ஹையா லால் நம்பி இருந்தார். ஆறு, ஏழு மாதங்கள் உருண்டோடின. ஆனால் கண்ஹையா லாலுக்கு பதில் வந்தபாடில்லை. காத்திருந்து வெறுத்துப்போன கண்ஹையா லால், ‘தனது விண்ணப்பத்துக்குப் பிரதமர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை’ என மத்திய தகவல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பினார்.

இதுபற்றி தகவல் ஆணையம் விசாரித்தபோது, ‘‘கண்ஹையா லாலின் விண்ணப்பம் எங்களுக்கு வரவில்லை. இதனால், பதிலளிக்க முடியவில்லை’’ பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இப்போது விண்ணப்பத்தின் இன்னொரு பிரதியைத் தகவல் ஆணையம், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.
கண்ஹையா லாலின் விண்ணப்பத்துக்குப் பதில் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. ஏனெனில், ஆர்.டி.ஐ விதிப்படி, அந்தத் துறைகளில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுப் பதிவாகியுள்ள தகவல்களை மட்டுமே தருவார்கள். புதிதாகத் தகவல்களை உருவாக்கித் தர வாய்ப்பு இல்லை. ரூ.15 லட்சம் பற்றி பிரதமர் அலுவலகத்தில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருந்தால், இதுதொடர்பான தகவல்களைத் தருவார்கள். இல்லை என்றால், தகவல்கள் பிரதமர் அலுவலகத்தில் இல்லை எனக் கூறுவார்கள் அல்லது மத்திய நிதித்துறைக்கு விண்ணப்பத்தை அனுப்பிவிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
கண்ஹையா லாலுக்குக் கிடைக்கப்போகும் பதிலுக்காக இந்தியாவே காத்திருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.