Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 27, 2016

'சங்க உறுப்பினர் ஆக இதுதான் தகுதி...!' -மிரள வைக்கும் மது குடிப்போர் சங்கம்


எங்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்றால் 10 மதுபானங்களின் (சரக்குகளின்) பெயர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று மிரள வைத்துள்ளது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்கம்.

தமிழகத்தில் மது குடித்து பாதிக்கப்படுவோருக்காக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் இன்று சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ஆலோசகர் திருச்சி தங்கவேல் தலைமை தாங்கினார். போராட்டத்தில், தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதே முக்கியமான கோரிக்கை. மதுபாட்டில் படத்துடனே சங்கத்தின் லேட்டர்பேடும் இருக்கிறது.



சங்கத்தின் மாநில தலைவர் செல்லப்பாண்டியனிடம் பேசினோம். "தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்கில் தங்களது விலைமதிப்பு மிக்க உயிர்களை பணையம் வைத்து மது குடிக்கின்றனர். அவர்களால் அரசுக்கு ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் மது குடிப்பவர்களை அரசு கண்டுக்கொள்வதில்லை. இதற்காகவே 2014ம் ஆண்டு தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்பு உணர்வு சங்கத்தை ஆரம்பித்தோம். எங்கள் சங்கத்தில் குறைந்தது 10 மதுபானங்களின் பெயர்கள் தெரிந்தால் மட்டுமே உறுப்பினர்களாக முடியும். மேலும் மது தொடர்பான அனைத்து விவரங்களும் குடிப்போருக்கு தெரிந்திருக்க வேண்டும். இப்போதைக்கு எங்கள் சங்கத்தில் 3 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். மதுகுடிப்போரின் நலன் கருதியே இந்த சங்கத்தின் செயல்பாடு அமைந்துள்ளது.

இன்று நடக்கும் இந்தப் போராட்டம் காவல்துறை சம்பந்தப்பட்டது. தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அப்போது சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி புதிய நியமனங்கள் நடக்கவில்லை. இப்போது உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டுகின்றனர். காவலர் பற்றாக்குறையால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஒருதலைக்காதல் கொலைகள், வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே காலியாக உள்ள 19 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நியமிக்க வேண்டும். காலிப்பணியிடங்கள் நிரப்பும் போது ஊர்காவல் படையில் உள்ள 16,000 பேருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், காவல்துறைக்குத் தனி ஆணையம் அமைக்க வேண்டும்.

தமிழக அரசு மதுவிலக்கு மற்றும் மறுவாழ்வு மையங்கள் அமைப்பதாக அறிவித்தது. ஆனால் அது அறிவிப்போடு நிற்கின்றன. 234 தொகுதிகளிலும் மதுகுடிப்போருக்காக தனியாக மருத்துவமனைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் தெளிவாக.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.