காவிரி பிரச்னையில் கர்நாடக அரசை கண்டித்து திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி எம்.எல்.ஏ. தங்கம்தென்னரசு ஆகியோர் தலைமையில் விருதுநகர் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.சீனிவாசன் உட்பட திமுகவினர் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். அங்கிருந்த போலீஸார், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு உட்பட 200 திமுகவினரை கைது செய்தனர்.
திருமண மண்டபத்தில் தங்க வைப்பதற்காக திமுகவினரை வேன் மற்றும் பஸ்களில் ஏற்றினர். அப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விருதுநகர் கிழக்கு இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியனிடம் எந்த மண்டபத்திற்கு அழைத்து செல்கிறீர்கள் என்றார். விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள ராஜலட்சுமி திருமண மண்டபத்திற்கு என்றார் இன்ஸ்பெக்டர். உடனே கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அந்த மண்டபத்தில் தண்ணீர் ஒழுங்காக வராதுப்பா. அங்கே தண்ணீர் பிரச்னை இருக்குது. முதலிலேயே சொல்லியிருந்தால் நாங்களாவது நல்ல திருமண மண்டபம் பார்த்திருப்போம் என்று சொல்லவும், கொஞ்சம் பொறுங்க அண்ணாச்சி என்ற போலீஸ் அதிகாரிகள் அவசர அவசரமாக விருதுநகர்-புல்லலக்கோட்டை சாலையில் வேறொரு தனியார் மண்டபத்தை ரெடி செய்து எல்லாரையும் வேனில் அங்கே அழைத்து சென்று தங்க வைத்தனர்.

போலீஸாரை கலாய்த்த தங்கம்தென்னரசு
விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற கைதான தங்கம் தென்னரசு உள்ளிட்ட திமுகவினரை ஏற்றி செல்வதற்காக அவர்கள் நிற்கும் இடம் அருகே வந்த போலீஸ் வேன் திடீரென்று ரிப்பேராகி நின்று விட்டது. உடனே அங்கிருந்த போலீஸார் வேனை தள்ளி, "ஸ்டார்ட்" செய்ய முயன்றனர். இதை கண்ட தங்கம்தென்னரசு, சார் நாங்க வேணும்ன்னா வேனை தள்ளி ஸ்டார்ட் பண்ணி அதுல போகட்டுமா என்று அங்கிருந்த போலீஸாரை பார்த்து கலாய்த்தார். அவரது கமெண்ட்டை கேட்ட போலீஸார் சிரித்து விட்டு ஒரு வழியாக வேனை தள்ளி ஸ்டார்ட் செய்து எல்லோரையும் ஏற்றி அழைத்து சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.