Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 22, 2016

ஏர்போர்ட் வரை மெட்ரோ பயணம்... பயணிகள் என்ன சொல்கிறார்கள்?


சென்னை மீனம்பாக்கம் தொடங்கி சின்னமலை வரையிலான மெட்ரோ ரயில் இரண்டாம்கட்ட விரிவாக்கம் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று தொடங்கிவைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்க, மத்திய தகவல்தொடர்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கொடி அசைவுடன் ஓடியது மெட்ரோ ரயில். மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். 27 வயது அம்சவேணி மற்றும் நளினி என்னும் இரு பெண் ஓட்டுநர்கள் இயக்கிய இந்த மெட்ரோ ரயிலில் முதற்கட்டமாக விமான நிலைய ஊழியர்கள் பயணம் செய்தனர்.



இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

சினிமா எல்லாம் சும்மா...! 4 கோடி ரூபாயைக் கொள்ளையடித்த நிஜ போலீஸ்
கோவையில் போலீஸ் வேடமிட்டு காருடன் ரூ.4 கோடி கடத்தியதாக சொல்லப்பட்ட வழக்கில், கடத்தியது நிஜ போலீஸ் தான் என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஹவலா பணத்தை கொள்ளையடித்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். three cops including inspector stole 4 croresthree cops including inspector stole 4 crores | சினிமா எல்லாம் சும்மா...! 4 கோடி ரூபாயைக் கொள்ளையடித்த நிஜ போலீஸ் - VIKATAN
விமான நிலைய ஊழியர்கள் சிலர், ‘‘ஏர்போட்டிலிருந்து சின்னமலை அல்லது கோயம்பேடு வரை செல்வது முன்பெல்லாம் ஒரு மணிநேரம் ஆகும். இந்த அதிவேக மெட்ரோ ரயில் வந்துள்ளதால் எங்களின் பயண நேரம் குறையும். மேலும், ‘கொல்கத்தா போன்ற பெருநகர மெட்ரோவில் எல்லாம் பயணம் செய்துள்ளோம். ஆனால், அதைவிட சிறந்ததாக இது இருக்கிறது. பெண் பயணிகள் அதிகம் இருப்பதால் மெட்ரோவிலேயே பெண்களுக்கான கழிவறை வசதிகள் இருந்தால் சிறப்பாக இருக்கும்” என்று தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

50 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விரிவாக்க மெட்ரோவில் இரண்டாம் கட்டமாகச் சென்ற ரயிலில்தான் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர் வேடமிட்ட முதியவர் கைலாசம், குடும்பமாக ரயிலேறி விமான நிலைய அதிகாரிகள் என சந்தோஷமும் சுவாரஸ்யமுமாக பயணம் செய்த சில பயணிகளின் வாய்ஸ் இதோ...

ஸ்டெபின் வர்கீஸ், குரோம்பேட்டை: ‘‘மெட்ரோ ரயில் விரிவாக்கம் வாகன நெருக்கடியை ஓரளவுக்குக் குறைக்கும். ஏசி பஸ்ஸில் போவதைவிட இதில் பயணம் செய்வது நன்றாக இருக்கிறது. டிக்கெட் விலையை 50 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகக் குறைத்தால் நன்றாக இருக்கும்.’’

அபிதா, திரிசூலம்: ‘‘ஏர்போர்ட்டுக்குப் பின்னாடி பூக்கடை வைத்திருக்கிறோம். கோயம்பேடு பூக்கடைக்குப் போக பேருந்து அல்லது தனியாக வண்டி எடுத்துக்கொண்டுதான் போக வேண்டும். இப்போது விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் இருப்பது எங்களைப் போன்ற புறநகர் பூக்கடை வியாபாரிகளுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், பூக்கடை வைத்திருக்கும் எங்களுக்கு ஏற்ற மாதிரி டிக்கெட் விலையை நிர்ணயிக்க வேண்டும்.’’

ஹிமபிந்து, தாம்பரம்: ‘‘இது நல்ல திட்டம். ஆனால் நிறைய மக்களுக்கு இதுபற்றி விழிப்பு உணர்வு தேவை. மக்கள், மெட்ரோவை அதிகமாக உபயோகப்படுத்தினால் சென்னையில் போக்குவரத்து விபத்துகள் குறையும். அதற்கு முதல்கட்டமாக எல்லோரும் உபயோகிக்கற மாதிரி டிக்கெட் விலையைக் குறைக்க வேண்டும்.’’

ராஜி சுப்பிரமணியம், சின்னமலை: ‘‘கோயம்பேடு வழித்தடத்தைவிட, சின்னமலை வழியில் பயணிப்பவர்கள் அதிகம். அதனால், ரயிலின் நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கலாம். மேலும், கோயம்பேடு செல்வதற்கு ஆலந்தூரில் இறங்கி மாற வேண்டி இருக்கிறது. அதற்கு ஒரு மேம்பாலமும் சேர்த்துக் கட்டப்பட்டால் பயணிகளுக்கு இன்னும் எளிதாக இருக்கும்.”

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.