Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

விநாயகர் பர்த்டேக்கு தமிழகம் எவ்வளவு செலவு பண்ணியிருக்கிறது தெரியுமா?


தெரு முக்குல ரொம்ப சிம்பிளா உக்காந்து இருக்குற பிள்ளளையரு ஒரே நாள்ல மிகப் பெரிய கோடீஸ்வரார் ஆகிட்டாரு.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு குட்டி பிள்ளையார் விற்பனை மட்டும் 300 கோடி .அதோடு பூ பழம்,என அன்றைய சிறு தொழில் ஷேர் மார்க்கெட்டை நிர்ணயித்ததும் பிள்ளையார்தான்.

மற்ற எந்த கடவுளுக்கும் இல்லாத சிறப்பு விநாயகருக்கு உண்டு .வேறு எந்த தெய்வத்தின் விசேஷச தினத்திலும் அந்த தெய்வத்தின் உருவம் பிள்ளையார் அளவுக்கு விற்பனையாவது இல்லை. தினமும் பார்க்கிற பிள்ளையாருக்கு மட்டும் அந்த கிரேஸ் குறையாமல் இருக்க காரணம் மனிதனின் அனைத்து கற்பனைகளையும் அங்கீகரிக்கும் கடவுளாக பிள்ளையார் விளங்குகிறார்.உலகத்தின் அத்தனை அப்டேட்களுக்கும் தகுந்த மாதிரி தன்னை மாற்றி கொள்வார் . சென்ற வருடம் விநாயகர் சதுர்த்திக்கு அண்ணா ஹசாரே,ஸ்பைடர் மேன் ,கப்பர் சிங் பட விநாயகர்னு கலக்குனவரு.இந்த வருடம் பாகுபலி ,செல்ஃபி  விநாயகருன்னு அடுத்த அப்டேட்க்கு போய்ட்டாரு .

பண்டிகை தினங்கள் தான் இந்திய சில்லறை வர்த்தகத்தின் சந்தோஷ நாள் .தீபாவளி, பொங்கல் மட்டுமே இருந்த பட்டியல்ல இந்த வருடம் முதல் விநாயகர் சதுர்த்தியும் சேர்ந்து இருக்கு .விநாயகர் சிலை ,பூ ,பழம் ,மளிகை சாமான்கள்ன்னு இந்த வருடம் தமிழகத்தில் மட்டும் 800 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.





சிலைகள் 

தமிழகம் முழுக்க பல லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.சென்னையில் மட்டும் 2500 இடங்களில் சுமார் 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்போடு 3ஆயிரம் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பெரிய சிலைகளை வழக்கமாக சில இந்து அமைப்புகள் மூலமாக வைக்கப்படுகின்றன

இந்த வருடம் வீடுகளில் வைத்து கும்பிட படும் குட்டி விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய குலாலர் சங்க தலைவர் தியாகராஜன் கூறும் போது ”போன வருஷம் எல்லாம் 20 ரூபாய்க்கு சிலைகளை வித்தோம் .செஞ்சதுல பாதி கூட விக்கல. இந்த வருடம் நாங்களே எதிர்பாக்காத அளவுல வியாபாரம் நடந்து இருக்கு. தமிழகம் முழுவதும் சுமார் 3 கோடி குட்டி விநாயகர் சிலைகள் வித்து இருக்கும்.சென்னையில மட்டும் 50 லட்சமும் மற்ற மெட்ரோ நகரங்கள் எல்லாத்துலயும் 10 லட்சத்துக்கும் மேல விற்பனையாகி இருக்கும்.இவ்வளவுக்கும் மண் தட்டுப்பாடு காரணமா  இந்த வருடம் ஒரு சிலை 80 ரூபாயில இருந்து 150ரூபாய் வரைக்கும் விற்பனை செஞ்சோம். பெரிய சிலைகளை பொறுத்தவரை 50 ஆயிரத்துல இருந்து ஒரு லட்சம் வரை ஆகும் ஆறு மாசத்துக்கு முன்னாடியே ஆர்டர் கொடுத்துருவாங்க.

பூ ,பழம் ,பலசரக்கு 

பிள்ளையர் கூடவே தொத்திக்கிட்டு விற்பனையாகுற பொருட்கள்ல பூ ,பழம் ,கொழுக்கட்டை, சாமான்கள் முக்கியமானவை.பூ விற்பனையை பொறுத்த வரை மிக சந்தோஷமான பண்டிகைன்னு இந்த விநாயகர் சதுர்த்தியை சொல்லலாம் என்கிறார் கோயம்பேடு பூ விற்பனை சங்கத்தை சேர்த்த ஹரி.சம்பந்தி மட்டும் சுமார் 8 ஆயிரம் டன் விற்பனையாகி உள்ளது.1கிலோ சம்பந்தி 150 இருந்து 200ரூபாய்க்கும் ,மல்லி வகைகள் 200 லிருந்து 500 ரூபாய் வரை சுமார் சுமார் 3டன்னும் ,ரோஸ் கிலோ 200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது . விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் 50 லட்ச ரூபாய்க்கு மேல் பூக்கள் விற்பனையாகி உள்ளன.பழ வகைகளில் வாழைப்பழமும், கரும்பும் அதிக அளவு விற்பனை ஆனதாக கூறுகின்றனர் .

மக்கள் பூ, பழம்,சிலைகளில் கட்டிய ஆர்வத்தை கொழுக்கட்டையில் காட்டவில்லை அதற்கு முக்கிய காரணம் விலைவாசி என்கிறார் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா. தமிழகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மளிகை சாமான் வர்த்தகம் இந்த விநாயகர் சதுர்த்திக்கு நடந்து உள்ளதாக கூறுகிறார் .

இனிமேல் தெரு முக்குல உக்காந்து இருக்குற விநாயகருக்கு ஒரு ரூபாய போட்டுட்டு ஓவரா பேசாதீங்க. இன்றைய தேதிக்கு இந்தியாவில காஸ்ட்டிலியா பிறந்த நாள் கொண்டுறது நம்ம பிள்ளையார் மட்டும் தான்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.