Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 17, 2016

தந்தை என்னை உயிரோடு எரிக்கப் பார்த்தார்.... மனம் திறக்கும் மாரியப்பன்


‘நான் பாராலிம்பிக்கில் தங்கம் வெல்ல முக்கியக் காரணம் எனது பயிற்சியாளர் சத்யநாராயணன் தான். அவருக்கே இந்த தங்கப் பதக்கத்தை உரித்தாக்குகிறேன்’. என மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெரியவடகம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் தான் இவரது வீடு அமைந்துள்ளது. சிறு வயதில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் இவரது வலது கால் பாதிக்கப்பட்டது. இவரது தாயார் சரோஜா, மாரியாப்பன் ரியோவில் பதக்கம் வெல்ல மற்றொரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

ஏழ்மையின் கடலில் தங்கமீனை வென்ற இவருக்கு தற்போது பதக்கமும் பாராட்டும் வந்தவுடன் தன்னை இழிவு படுத்திய சொந்தம் தேடி வந்து பதக்கத்திற்கு உரிமை கொண்டாடி வருவதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மனம் திறக்கும் போது,

தயவு செய்து யாரும் என்னை தங்கவேலு மாரியப்பன் என கூப்பிட வேண்டாம். நான் வறுமையின் பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கையில் என் தந்தை தங்கவேலு, 4 குழந்தைகளையும் எனது தாயாரிடம் விட்டு சென்றார்.

என்னையும் எனது அம்மாவையும் கொஞ்சம் கூட கருணை இல்லாமல் கொடுமை படுத்திய எனது தந்தை ஒருமுறை என்னை உயிரோடு எரிக்கவும் பார்த்தார். கருணை உள்ளம் கொண்ட கடவுளுக்கே எனக்கு உதவ நேரம் இல்லாத சமயத்தில் எனது வீட்டிற்கு ரூ 10,000 கொடுத்து உதவிய எனது பயிற்சியாளர் சத்யநாராயணன் என்னை ஜெர்மெனிக்கு பயிற்சிக்காக அனுப்பிவைத்தார்.

அவர் மட்டுமே எனது வெற்றிக்கு உந்து சக்தியாய் இருந்தவர். அவருக்கே எனது பதக்கத்தை அர்ப்பணிக்கின்றேன். என உருக்கமுடன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.