உயிர் போகும் அவசரம் என்றால், அனைவரும் என்னைதான் அழைக்கிறார்கள். மனித உயிரின் உன்னதம் எனக்கு தெரியும். அதனால், என்னை அழைக்கும் அனைவருக்குமே நான் 24 x 7 மணி நேரமும் சேவையாற்றி வருகிறேன். உங்களைக் காப்பாற்ற துடிக்கும் எனக்கும் உயிர் உண்டு. உணர்வுகள் உண்டு.
108 என்ற எண்ணை தவிர, இதற்கு பின்னால் உள்ள வலிகளும், வருத்தங்களும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..?
தமிழகம் முழுவதும் எனக்கு சொந்தமாக 787 வாகனங்கள் உண்டு. சென்னையில் மட்டும் நான் 40 ஆம்புலன்ஸ் வாகனங்களில் உலவிக்கொண்டு இருக்கிறேன். எனது ஒவ்வொரு வாகனத்திலும் மருத்துவர், செவிலியர், உதவியாளர், ஓட்டுநர் என 4 பேர் வீதம், தமிழகம் முழுவதும் 4200 பேர் என்னுடன் சேர்ந்து சேவையாற்றுகிறார்கள்.
தமிழகத்தின் எந்த சந்து பொந்துகளில் நின்றுக்கொண்டு நீங்கள் 108 என்று என்னை அழைத்தாலும், எல்லா அழைப்புகளுமே சென்னைக்குதான் வரும். இதற்காக சென்னை கால் சென்டரில் இரவு-பகல் என 160 பேர் பணியாற்றுகிறார்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல், முதலுதவி பெட்டியுடன், பயிற்சி பெற்ற மருத்துவர்களை கொண்டு; சென்னையில் 10 இருசக்கர வாகனம் உட்பட, தமிழகம் முழுவதும் 41 இருசக்கர வாகனத்திலும் இப்போது நான் முதலுதவி சேவையாற்றி வருகிறேன். எனது ஒவ்வொரு இருசக்கர வாகனமும், நாள் ஒன்றுக்கு 5 பேருக்கு குறையாமல் சேவையாற்றுகிறது. .
தினமும் என்னை சராசரியாக 25 ஆயிரம் பேர் அழைக்கிறார்கள். ஒரே பிரச்னைக்கு 20 பேர் கூட அழைப்பதுண்டு. ஒரே நபர் 10 முறைகூட அழைப்பதுண்டு. இப்படி நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 600 சேவைகளை நான் ஆற்றி வருகிறேன்.
என்னை அழைக்க கட்டணமில்லை. நீங்கள் அழைக்கும்போது குறைந்தபட்சம் 90 வினாடிக்குள்ளும், அதிக பட்சம் 120 வினாடிக்குள்ளும் சொல்ல வந்த செய்தியை துள்ளியமாக சொல்லுங்கள். உங்கள் அழைப்பு துண்டிக்கப்படும் அடுத்த வினாடியிலிருந்து அவசர அவசியம் கருதி, அடுத்த 18 நிமிடங்களில் நான் சேவை செய்ய வேண்டும். அவர்கள் உயிர் காக்க முதலில் நான்தான் போராட வேண்டும்.
"நான் ஆர்பர் பக்கத்துல இருந்து பேசுகிறேன்" என்றும், கன்னகி நகரில் இருந்து பேசுகிறேன், "கடற்கரையில் இருந்து பேசுகிறேன்" என்று சொன்னால், போதாது. எந்த ஊர், எந்த இடம், என்ன பிரச்னை, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, நீங்கள் தரும் விவரங்கள் துள்ளியமாக இருக்கும் பட்சத்தில், அந்த இடத்திற்கு குறைந்தபட்சம் 6 நிமிடத்தில்கூட என்னால் வர முடியும்.
"தூத்துக்குடி ஆர்பர் பக்கத்துல உள்ள கன்னகி நகர், 2வது தெருவில் உள்ள ஒரு குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேருக்கு கடுமையான தீகாயம்" என்று எல்லா விவரங்களும் உள்ளடக்கி சொல்ல வேண்டியது அவசியம். கடந்த வருடம் சென்னை சென்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பின்போது, எனக்கு சொல்லப்பட்ட சரியான தகவலின் அடிப்படையில் அந்த இடத்திற்கு என்னால் 6 நிமிடத்தில் செல்ல முடிந்தது.
குறிப்பாக 108 க்கு அழைக்கும் நீங்கள், எந்த செய்தியும் சொல்லாமல், அழுதுகொண்டே இருப்பதாலோ, பதற்றத்தில் எந்த செய்தியையும் முழுமையாக சொல்லாமல் பொத்தம் பொதுவாக சொல்வதாலோ, உங்களையும் அறியாமல் அந்த உயிருக்கு எதிராக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்பதுதான் உண்மை. உடனடியாக காப்பாற்ற வேண்டிய ஒரு உயிரை, நீங்கள் தரும் அரைக்குறையான மற்றும் தவறான தகவலினால் சுற்றி வளைத்து, தாமதப்படுத்துவதால், சமயங்களில் அந்த உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மிக அவசரமின்றி என்னை அழைக்க வேண்டாம். விளையாட்டிற்காகவோ, கலாய்கவோ என்னை அழைக்க வேண்டாம். மாலை 6 மணிக்கு மேல் குடிகார சங்கத்தை சேர்ந்த சிலர் வேண்டும் என்றே எங்களை அழைத்து, நேரத்தை வீணடிக்கிறார்கள். முக்கியமாக தகாத வார்த்தைகளில் பேசி திட்டவும் செய்கிறார்கள். தினமும் 500 பேரிடம் பேசும் எங்கள் பணியாளிடம், நீங்கள் இப்படி அநாகரிகமாக பேசுவது எந்த வகையில் நியாயம் மனிதரே?
நாள் ஒன்றுக்கு 100 அழைப்புகளாவது இதுபோன்று வந்துவிடுகிறது. ஒரே நபர் ஆயிரம் முறையும் இதுபோன்று பேசியதுண்டு. இப்படி நீங்கள் அழைக்கும் தருணங்களில், அழைப்புக்கு இணைப்பு கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் எதிர் முனையில் காத்திருக்கவும் செய்கிறார்கள். அதனால், சமயங்களில் உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். தயவு செய்து பிறர் உயிரோடு விளையாடதீர்கள்.
என்னை அழைத்தால் உடனடியாக உயிர் காப்பாற்றப்படும் என நம்பிக்கையோடு தினம் 25 ஆயிரம் பேர் நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையை சிதைக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்பூலோகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுமே, மேன்மை பொருந்தியவைதான். அதனால், எந்த உயிர் போவதற்கும், தயவு செய்து நீங்கள் காரணமாக இருந்து விடாதீர்கள். ப்ளீஸ்.
108ல் வந்த ஒவ்வொரு நோயாளிகளும் காப்பாற்றப்படும்போது, இவ்வுலகில் நான் அடையும் சந்தோஷங்கள் அளவிட முடியாதவை. அதேபோல், 108ல் ஏறிய உடனே வலியால் பாதிக்கப்பட்டவரோ, பாதிக்கப்பட்டவருக்காக அவரது உறவினரோ கத்தி துடித்து அலறும்போது, நானும் பல தருணங்களில் நிலைகுலைந்து துடித்துப்போகிறேன். அந்த வலிகளையும், வருத்தங்களையும் சாலைகளில் நான் அலறிக்கொண்டு வருவதில் வெளிப்படும். அந்த வேதனையான தருணங்களை, உயிர் பிரிய துடிக்கும் உச்சத்தின் நிமிடங்களை உங்களில் பலர் உள்ளுர உணர வாய்ப்பில்லை. ஒருவேளை அவர்களின் உயிர் பிரிந்தால், அந்த தருணங்களில் நான் அடையும் துயரத்திற்கு அளவே இல்லை.
எனக்கு நீங்கள் உதவ நினைத்தால், நான் வரும்போது எனக்கு வழி விடுங்கள். நான் வரும் வரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஆதரவற்றவர்கள் பாதிக்கப்படும்போது, அவர்கள் உடன் வாருங்கள். இதை சேவையாக செய்யுங்கள். என்னை போலவே, பாதிக்கப்பட்டவர்களின் கண்களுக்கு, நீங்களும் கடவுள்தான்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.