Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 6, 2016

தெற்காசியாவில் ஒரே ஒரு நாடு பயங்கரவாதத்தைப் பரப்புகிறது: பிரதமர் மோடி


பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் ஜி20 நாடுகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி ‘தெற்காசியாவில் பயங்கரவாதத்தை ஒரேயொரு நாடுதான் பரப்பி வருகிறது’ என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த அச்சுறுத்தலை ஸ்பான்சர் செய்பவர்களுக்கு தடை விதிக்க வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும் என்று கடுமையாக பேசினார் மோடி.

“ஒரேயொரு தனிநாடு தெற்காசியாவில் நம் பகுதியின் நாடுகளில் பயங்கரவாதத்தின் காரணிகளை பரப்பி வருகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிராக ஜி20-யின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. அனைத்து நாடுகளும் நிதி நடவடிக்கை பணித்திட்டக்குழுவின் அளவுகோல்களை எட்ட வேண்டும்.

வன்முறை மற்றும் பயங்கரவாத சக்திகளின் வளர்ச்சி அடிப்படையான சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதனை தங்களது அரசக் கொள்கையாகவே சில நாடுகள் கடைபிடித்து வருகின்றன. தீவிரவாதத்தை ஒருக்காலும் பொறுக்க முடியாத நாடுகளில் இந்தியா முதன்மையானது. இதற்கு குறைவான கொள்கை எதுவும் போதாமையாகவே முடியும்.

நம்மைப் பொறுத்தவரை பயங்கரவாதி என்பவன் பயங்கரவாதிதான்” என்றார் பிரதமர் மோடி.

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபரிடம் எழுப்பினார் மோடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.