Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 12, 2016

உலகிலேயே உயரமான கட்டடத்தில் 22 அபார்ட்மென்டுகள் வாங்கிய இந்திய மெக்கானிக்!


துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டடம்தான், உலகிலேயே உயரமானக் கட்டிடம்.  கடந்த 2004ம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 2010ம் ஆண்டு நிறைவடைந்தது. 2, 722 அடி உயரம் கொண்ட இந்தக் கட்டிடத்தில் இந்தியரான ஜார்ஜ் வி. நீரபரம்பில் 22 அபார்ட்மென்டகளை வாங்கியிருக்கிறார். 900 அபார்ட்மென்டுகள் உள்ள, இந்த கட்டிடத்திலேயே அதிக அபார்ட்மென்டுகளை சொந்தமாக வைத்துள்ளவர் இவர்தான்.

கேரள மாநிலம் திருசூரைச் சேர்ந்த ஜார்ஜ், 11 வயதிலேயே தந்தையுடன் சேர்ந்து உழைக்கத் தொடங்கியவர். பின்னர், கேரளத்தில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். 1976ம் ஆண்டு  துபாய்க்கு சென்று ஏசி மெஷின்கள் பழுதுபார்க்கும் வேலை பார்த்து ஆரம்பித்தார்.தொடர்ந்து குளிர்சாதன பொருட்கள் வர்த்தகத்திலேயே ஈடுபட்டு, இன்று ஜிஈஓ துபாய் குழுமத்தை தோற்றுவித்துள்ளார். ஜார்ஜின் உறவினர் ஒரு முறை புர்ஜ் கலீபா கட்டிடத்திற்கு உன்னால் நுழைய முடியுமா என கிண்டலாக இவரை பார்த்துக் கேட்டுள்ளார். அதனை சவாலாக ஏற்ற ஜார்ஜ் இப்போது புர்ஜ் கலீபா கட்டிடத்தில் 22 அபார்ட்மென்டுகளை வாங்கிக் காட்டியுள்ளார்.



இது குறித்து ஜார்ஜ் கூறுகையில்,  'ஒரு முறை புர்ஜ் கலீபாக் கட்டிடத்தைக் காட்டிய என உறவினர் ஒருவர், இந்த கட்டிடத்துக்குள்ளேயே உன்னையெல்லாடம் விடக் கூட மாட்டாங்க என்றார். அவரது விளையாட்டான கேலிப் பேச்சுதான் இந்த கட்டடத்தில் அபார்ட்மென்ட் வாங்க வேண்டுமென்று என்னை யோசிக்க வைத்தது. கடந்த 2010ம் ஆண்டு இந்த கட்டிடத்தில் வாடகைக்கு அபார்ட்மென்ட் இருப்பதாக பத்திரிகையில் விளம்பரம் வந்தது. இதையடுத்து, அந்த அபார்ட்மென்டில் வாடகைக்கு தங்கினேன். அடுத்த 6 ஆண்டுகளில் ஒவ்வொன்றாக வாங்கி தற்போது இந்த கட்டிடத்தில் 22 அபார்ட்மென்டுகள் எனக்கு உள்ளன. இதில் 5 அபார்ட்மென்டுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். மற்றவை இன்னும் வாடகைக்கு விடவில்லை. நல்ல நபர்கள் கிடைத்தால் வாடகைக்கு விடுவேன். இத்துடன் நிறுத்தப்போவதில்லை இந்தக் கட்டடத்தில் இன்னும் அபார்ட்மென்ட்கள் விற்பனைக்கு வந்தால் வாங்குவேன்'' என தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் பரம்பிலின் ஜிஈஓ நிறுவனம் கடந்த 34 ஆண்டுகளாக குளிர்சாதன பொருட்கள் சந்தையில் கொடிக் கட்டி பறந்து வருகிறது. இந்திய கடற்படைக்கு குளிர்சாதன பொருட்களை சப்ளை செய்கிறது. 2010ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் குளிர்சாதன வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தது. கொச்சின் விமான நிலைய கட்டுமானப்பணியிலும் ஜிஈஓ நிறுவனம் முக்கிய பங்காற்றியிருக்கிறது.  நாட்டிலேயே முதன் முறையாக தனியார் மற்றும் பொதுத்துறையினர் பங்களிப்புடன் கட்டப்பட்ட  விமான நிலையம் இது. 30 நாடுகளில் வசிக்கும் 10 ஆயிரம் என்.ஆர்.ஐக்கள் இந்த விமான நிலையத்தில் முதலீடு செய்துள்ளனர். அடுத்ததாக திருவனந்தபுரத்தில் இருந்து கேரளாவின் கர்நாடக மாநில எல்லைப் பகுதியான காசர்கோடு வரை வாய்க்கால் வெட்டி, கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்பது ஜார்ஜின் கனவு. நினைத்ததை நடத்திக் காட்டுவது ஜார்ஜின் வழக்கம் என அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.