Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 18, 2016

அமேசானின் மொபைல் செகண்ட் சேல்ஸ்!


இன்று நாம் எந்தப் பொருளை வாங்க நினைத்தாலும், முதலில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைத்தான் நாடுகிறோம். அந்த அளவிற்கு ஆன்லைன் ஷாப்பிங் இந்தியாவிலும் வளர்ந்துவிட்டது. நிறைய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் இருந்தாலும் கூட, இன்னும் இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் நிறுவனமே முதலிடத்தில் நீடிக்கிறது. அதற்கடுத்த இடத்தில் இருக்கும் அமேசான் நிறுவனம், முதலிடத்தைப் பிடிக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது தனது தளத்தில், Refurbished மொபைல்கள் மற்றும் செகண்ட் ஹேண்ட் மொபைல்களையும் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.

இவற்றில் என்ன ஸ்பெஷல்?

விற்பனைக்கு வரும் மொபைல்களில் ஏதேனும் குறைகள், பழுது ஆகியவை இருந்தால் அவை விற்பனைக்கு செல்லாமல் அவை மீண்டும் அந்த மொபைல் தயாரிப்பு நிறுவனத்திற்கே அனுப்பப்பட்டுவிடும். அப்படி வரும் மொபைல்களை அந்நிறுவனம் மீண்டும் சரிசெய்து, புதிய போன்களைப் போலவே மாற்றி விற்பனைக்கு அனுப்பும். இப்படி அனுப்பப்படும் மொபைல்களுக்கு Refurbished மொபைல்கள் எனப் பெயர். ஏற்கனவே இந்தியாவில் இந்த Refurbished போன்களை விற்க நிறைய இணையதளங்கள் இருக்கின்றன. Overcart, GreenDust போன்ற தளங்கள் இந்த விற்பனையில் கொஞ்சம் பிரபலமானவை. புதிய மொபைல்களின் விலையை விடவும், இந்தவகை மொபைல்களின் விலை சில ஆயிரங்கள் குறைவு என்பதால் இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கின்றன. மொபைல் போன் நிறுவனம், அதனை விற்பனை செய்யும் தளம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் விலை மாறுபடும். கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் சுமார் 7 மில்லியன் Refurbished போன்கள் விற்பனை ஆகியுள்ளன.

இத்துடன் ஏற்கனவே நல்ல வரவேற்பு இருக்கும் செகண்ட் ஹேண்ட் மொபைல் விற்பனையையும் இத்துடன் இணைத்துள்ளது அமேசான் இந்தியா. ஏற்கனவே பயன்படுத்திய மொபைல்கள் சில கண்டிஷன்களுடன் இதில் கிடைக்கின்றன. மொபைலின் முழு நிலவரத்தையும் முன்பே தெரிந்துகொண்டு பின்பே வாங்கலாம். இந்த முறையில் தற்போது ஒன் பிளஸ், சாம்சங், நோக்கியா, ஆசுஸ், எக்ஸ் ஓலா, இன்போகஸ், எல்.ஜி, எம்.ஐ என அனைத்து முன்னனி நிறுவனங்களின் மொபைல்களும் இதில் கிடைக்கின்றன. அதே போல மொபைல் மட்டுமின்றி டேப்லட், லேப்டாப் ஆகியவையும் கிடைக்கும்.



கண்டிஷன்ஸ் அப்ளை:

அமேசான்.இன் வெப்சைட் மூலம் புதிதாக வாங்கும் பொருட்களைப் போலவே இவ்வகை பொருட்களுக்கும் ஆறு மாதம் வாரண்டியும் உண்டு. பொருள் வாங்கியவர்களின் பகுதியில் அருகில் இருக்கும் சர்வீஸ் கம்பெனியில் கொடுத்து சர்வீஸ் செய்தும் கொள்ளலாம். ரிட்டன் பாலிசி படி, கைக்கு வரும் போது இவ்வகைப் பொருட்களில் டேமேஜ் இருந்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பியனுப்பி விடலாம். அதோடு குறிப்பிட்ட நாளுக்குள் பணம் திரும்பப் பெறும் வசதியும் உண்டு. இவ்வகை போன்கள் வாங்கியவர்களின் கருத்துக்களையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.    

’’அமெரிக்க ஆன்லைன் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானத்தை விற்பனை மூலம் பெற்று வருகிறது அமெசான் கம்பெனி. வரும் 2025-ம் ஆண்டிற்குள் ஒட்டு மொத்த விற்பனை மதிப்பான 81 பில்லியனில், 2.2 பில்லியன் லாபத்தை பெறும்’’ என பாங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமேசானின் விற்பனை இந்தியாவில்தான் அதிகம். என்றாலும், இந்திய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டான ஃபிளிப்கார்ட் முதலிடத்தில்தான் இருக்கும். எனவே இதுபோன்ற புது சேவைகள் மூலமாக, புதிய வாடிக்கையாளர்களை சந்தைக்கு இழுக்க, அமேசான் முயற்சி செய்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.