Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

'தேச இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது!'- அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமைக் குரல்


காஷ்மீர் வன்முறைக்கு தீர்வு காண எல்லா தரப்பினருடனும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அதேநேரம் இந்தியாவின் இறையாண்மை விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்று அனைத்துக்கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பர்ஹான் வானி என்ற பயங்கரவாதி கடந்த ஜூலை மாதம் ஜம்மு-காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை வெடித்தது. கடந்த இரண்டு மாதங்களாக அங்கு நிலவி வரும் பதற்றமான சூழல் இன்னும் விலகவில்லை.

அதை முடிவுக்கு கொண்டுவர, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு ஜம்மு-காஷ்மீருக்கு கடந்த 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் பயணம் மேற்கொண்டது. அப்போது, பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அரசு அலுவலர்கள் என பல்வேறு தரப்பினரிடம் அக்குழுவினர் கலந்துரையாடி கருத்துகளைக் கேட்டறிந்தனர். எனினும், அவர்களைச் சந்திக்க ஹுரியத் உள்ளிட்ட பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில், ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் பயணம் குறித்தும் இந்த விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காஷ்மீரில் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர்.

அதன் பின்னர் அவர்கள் அனைவரும் ஒருமனதாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில், ''பிரிவினைவாதிகளை பற்றி நேரடியாக குறிப்பிடாமல், ‘காஷ்மீர் மக்கள் வன்முறைபாதையை விலக்கி அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும். வன்முறையை முடிவுக்கு கொண்டு வர மாநிலத்தின் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும், காஷ்மீர் மாநில அரசும் எடுக்கவேண்டும்.

அதேநேரம் இந்தியாவின் இறையாண்மை விஷயத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், அனைத்துக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் மருத்துவ உதவிகளை வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.