Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 18, 2016

அரசியல் கட்சிகளின் பெயரில் சாதியின் பெயரை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்


அரசியல் கட்சிகளின் பெயரில் சாதியின் பெயர் இடம்பெற அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சாதி, இனத்தின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி கண்ணன் கோவிந்தராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து இக்கட்சிகள் இனத்தின் பெயரை கொண்டுள்ளதால், அக்கட்சிகளின் பெயரை மாற்றும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தர்விட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதியிட்ட கடிதம் ஒன்று தாக்கல் செய்ய்ப்பட்டது.

அதில், ''சாதி பெயர்களை அரசியல் கட்சிகளின் பெயரில் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. அதே சமயம் அரசியல் கட்சிகளின் பெயரில் இனத்தின் பெயரை பயன்படுத்துவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறிய செயல் ஆகாது. அது ஆட்சேபனைக்குரியதும் அல்ல'' என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.