நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் அக்டோபர் 29 ஆம் தேதி வரை இந்திய அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருதின போட்டிகளை விளையாடவுள்ளது. இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் வரும் வியாழக்கிழமை தொடங்கவுள்ள சூழ்நிலையில். இந்திய அணியுடன் விளையாடுவதற்கு முன்பாக மூன்று நாள் பயிற்சி போட்டி ஒன்றை ஆடியது நியூசிலாந்து.
கடந்த 16-18 ஆம் தேதி டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் மும்பை அணியுடன் மோதியது நியூசிலாந்து. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கியது. மும்பை அணிக்கு ஆதித்ய தாரே கேப்டனாகவும், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாகவும் செயல்பட்டனர். முதல் இன்னிங்சில் டாம் லாதம், கேன் வில்லியம்ஸன் இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர் மற்ற நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் மும்பை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் அவுட்டாகி வெளியேறினர். முதல் இன்னிங்ஸில் 75 ஓவர் விளையாடி, ஏழு விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது நியூசிலாந்து அணி. மும்பை அணியில் ஒன்பது பேர் பந்து வீசியிருந்தார்கள். பல்விந்தர் சந்து 11 ஓவர் வீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

மும்பை அணி அபாரமாக முதல் இன்னிங்ஸை தொடங்கியது. பவார், சூரியகுமார் யாதவ், சித்தேஷ் லட் ஆகிய மூன்று வீரர்களும் சதமடித்தனர். 114 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 464 ரன்களை எடுத்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது மும்பை அணி. 140 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து. சூழல் மண்ணில் மற்ற வீரர்கள் பேட்டிங் செய்து பயிற்சி பெறட்டும் என களமிறங்காமல் ஒதுங்கிக் கொண்டார் கேப்டன் வில்லியம்சன். இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. ஆறு நியூசிலாந்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். ஆனால் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லுக் ரோஞ்சி மட்டும் தனியாளாக போராடி சதமடித்தார். ரோஞ்சியின் சதத்தால் இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பித்தது நியூசிலாந்து அணி. இரண்டாவது இன்னிங்ஸை 235 ரன்களுக்கு இழந்தது நியூசிலாந்து. 96 ரன்கள் எடுத்தால் மும்பைக்கு வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் போதிய ஓவர்கள் இல்லாத காரணத்தால் மும்பை அணி பேட்டிங்கை துவக்குவதற்கு முன்னதாகவே இரண்டு அணி கேப்டன்களின் ஒப்புதலின் பேரில் நடுவர்களால் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.
நியூஸியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஓரளவு விளையாடினாலும், நடுவரிசை மற்றும், கீழ்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு இந்திய மண் பரிச்சயம் இல்லாததும், நியூஸியின் பந்துவீச்சு, சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் இல்லாத வீரர்களிடம் எடுபடவில்லை என்பதும் இந்த பயிற்சி போட்டி வாயிலாக நன்றாக தெரிந்தது. எனினும் போட்டி நடக்கும் பிட்ச், அன்றைய வானிலை, டாஸ் எல்லாம் டெஸ்ட் போட்டியில் முக்கியம் என்பதால் முதல் டெஸ்ட் போட்டி இரண்டு அணிக்கும் சவாலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.