Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 1, 2016

ரோசய்யாவுக்கு குட்பை..! தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநர் நியமனம்


ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி பிரணாப் அறிவித்துள்ளார்.

ஆந்திரா முன்னாள் முதல்வர் ரோசய்யா கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார். தமிழக ஆளுநராக ரோசய்யா பதவியேற்றதில் இருந்து இதுவரையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அவருக்கு அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் எந்த பிரச்சனையும் இல்லை.

ரோசய்யாவின் பதவி காலம் நேற்றுடன்  (ஆகஸ்ட் 31ஆம் தேதி) முடிவடைந்தது. மீண்டும் ஆளுநராக ரோசய்யா நீடிப்பார் என்றும் தகவல் வெளியானது. இதனிடையே, குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் நியமிக்கப்படலாம் என்றும் ஒருபுறம் தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் கவனிப்பார் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில பாஜகவைச் சேர்ந்தவர் வித்யாசாகர் ராவ் (71). முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் கரீம்நகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான அவர், 3 முறை ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.