Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 5, 2016

நாடு தழுவிய செவிலியர்கள் வேலை நிறுத்தம் திடீர் வாபஸ்!


நாடு தழுவிய செவிலியர்களின் வேலை நிறுத்த போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

ஊதியம், படிகள் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய அரசு நர்சுகள் கூட்டமைப்பு மற்றும் டெல்லி நர்சுகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில், தலைநகர் டெல்லியில் மத்திய மற்றும் மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 20 ஆயிரம் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



அவர்கள், மருத்துவமனைகளின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர்களின் வேலை நிறுத்தத்தால், மருத்துவமனைகளில் மகப்பேறு உள்ளிட்ட மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு நடைபெறவேண்டிய அறுவை சிகிச்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதையடுத்து, இந்த வேலை நிறுத்த போராட்டம் சட்டவிரோதம் என்பதை அறிவிக்கும் விதமாக அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டமான ‘எஸ்மா’வை ஆளுநரின் ஒப்புதலுடன் டெல்லி அரசு நேற்று முன்தினம் பிறப்பித்தது. இதை தொடர்ந்து, டெல்லி அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட இரு ஆண் செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் பிரச்னை தொடர்பாக வருகின்ற 12-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தொலைபேசி மூலம் உறுதியளித்ததை தொடர்ந்து, நாடு தழுவிய வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக அகில இந்திய அரசு நர்சுகள் சங்க கூட்டமைப்பு நேற்று பின்னிரவு திடீரென அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.