நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக பேருந்துகள், எல்லையில் நிறுத்தப்படுகிறது.
மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 10 தொழிற்சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் 33 கோடி பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், வங்கி, இன்சூரன்ஸ், ரயில் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே பலத்த பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வங்கி சேவைகளும் முடங்கி உள்ளன. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பேருந்துகளை வழக்கம் போல் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் காரணமாக, தமிழகத்தில் இருந்து அன்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. சித்தூர், திருப்பதி போன்ற ஊர்களுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் திருத்தணியோடு நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஆந்திர அரசின் பேருந்துகள் தமிழகத்திற்கு இயக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
பந்தையொட்டி புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், புதுச்சேரியி குபேர் பஜார் பகுதியில் கடைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.