Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 12, 2016

”மருத்துவக் கடனை அடைக்கவேண்டும்'': சாம்பியன் தங்கவேலுவின் கனவு!


பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேலுவை தங்களது லட்சியப் பயணத்திற்கு ஆதர்சனமாக வைத்து ஒவ்வொரு இந்தியரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்கவேலுக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவு இப்போது கைகூடவும் போகின்றது.


”என்ன கனவு என்று கேட்கிறீர்களா?'' அதை தங்கவேலின் வார்த்தைகளிலேயே சொல்கிறோம். ‘5 வயதில் எனக்கு விபத்து ஏற்பட்டபோது மருத்துவ செலவிற்காக எனது அம்மா 3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். 15 வருடம் கழிந்து அந்த கடனை அடைக்கபோகிறேன். இந்தத்தருணத்தில் தான் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று  உணர்ச்சி பொங்க கூறி இருக்கிறார் தங்கவேலு.

தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பஸ் விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அப்போது தங்கவேலுவின் மருத்துவ செலவிற்காக அவரது அம்மா சரோஜா மூன்று லட்சம் கடன் வாங்கியிருந்தார். வீடு வீடாக சென்று காய்கறி விற்கும் சரோஜாவால் மூன்று லட்சத்தை கட்டமுடியவே இல்லை. இது நாள் வரை அதற்கு வட்டி மட்டுமே கட்டி வந்திருக்கிறார். பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றதன் மூலம் கிடைக்கும் பரிசுதொகையை வைத்து அந்த கடனை கட்ட போகிறார் தங்கவேலு.

 



''நான் இப்போது  உலகின் நம்பர் 1 ஆக இருக்கலாம். ஆனால், என்னுடைய வாழ்க்கை மிக கடுமையானதாக இருந்தது. விளையாட்டு எனக்கு உயிர்! ரியோவில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்றால், நிதி பற்றாக்குறையால்  விளையாட்டில் இருந்தே நான் வெளியேறி இருப்பேன். இதுதான் என்னுடைய கடைசி பிரம்மாஸ்திரமாக இருந்தது. உயரம் தாண்டுதல் விளையாட்டின் மூலம்  இதுநாள் வரை நான் சம்பாதித்தது இல்லை. கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்றபோதும் நான் எதையும் பெறவில்லை. மாதம் ரூ.5000 சம்பாதிக்கும் என் அம்மாவால் ரூ.3 லட்சம் கடனை எப்படி அடைக்க முடியும்? அதனால் தான் எப்படியாவது இந்தப்போட்டியில் வென்றுவிட வேண்டும் என்கிற லட்சிய வெறியோடு விளையாடினேன். தற்போது கிடைக்கவுள்ள பரிசு பணம் மூலம் முதலில் எனது  கடன் அடைக்க வேண்டும். இவ்வுளவு வறுமையிலும் எனது கனவுகளுக்கு உதவிய என்  அம்மாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை எற்படுத்தி கொடுக்க வேண்டும்'' என கனத்த இயத்துடன் தனது பால்ய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் தங்கவேலு.மருத்துவ கடனை அடைத்தபிறகு, ஒரு வீடு கட்டுவதும்,  உயரம் தாண்டுதலில் உலக சாதனை செய்ய வேண்டும் என்பதும் தங்கவேலுவின் மற்றொரு லட்சியம். இதற்கான பயிற்சிகளை எடுக்க இந்தப் பணம் உதவும் என தங்கவேலு நம்புகிறார்.



 ''நான் சாதித்ததை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு எனது அம்மா என்ன  விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். 'இப்போது நம்மால் ஒரு வசதியான வாழ்க்கை நாம்  வாழ முடியும்' என்று அம்மாவை ஆரத்தழுவி சொல்ல வேண்டும்.  நான் வீட்டுக்கும் எந்த உதவிகளையும் செய்யாமல் நாள் முழுக்க பயிற்சி எடுத்து இருக்கிறேன். என்னால் எனது குடும்பத்தினர் நிறைய இழந்திருக்கிறார்கள். இனி அவர்களுக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும். இந்தியா நமது சாதனைகளை அங்கீகரிக்கும் உறுதியாக நம்பிகிறேன். எனவே இந்தியர்கள் இனி  பாரா-விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற தீவிரம் காட்ட வேண்டும் '' என்று தம்ஸ் அப் காட்டுகிறார் தங்கவேலு.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.