பேசி சர்ச்சைக்குள்ளாகும் பல பிரபலங்கள் உண்டு. எதுவுமே பேசாமல் இருந்தாலும் சர்ச்சைக்குள்ளாவது ரஜினி மட்டுமே. இந்திய விலங்குகள் நல வாரியத்தின் தூதராக அவரது இளைய மகள் சவுந்தர்யா நியமிக்கப்பட்டதனால் இப்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார் ரஜினி.
இந்திய விலங்குகள் நல வாரியத்தின் துாதராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டார் சவுந்தர்யா ரஜினிகாந்த். 'சவுந்தர்யா ரஜினிகாந்த், திரைப்படங்களில் விலங்குகள் வரும் காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் காட்சிப்படுத்துவது குறித்து திரைப்பட படைப்பாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்' என எதிர்பார்ப்பதாக அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பிற்கு காரணம் தெரிவித்திருந்தது இந்திய விலங்குகள் நலவாரியம். இதற்காக பல்வேறு துறை பிரபலங்களும் சௌந்தர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்க ரஜினியும் தன் மகளை ட்விட்டரில் வாழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் 'தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட காரணமாக இருந்த இந்திய விலங்குகள் நலவாரியத்தின் துாதராக சௌந்தர்யா பொறுப்பேற்றுக்கொண்டது கண்டிக்கத்தக்கது. மகள் சவுந்தர்யாவுக்கு ரஜினி அறிவுரை சொல்லி உடனடியாக அவரை பதவி விலகச் சொல்லவேண்டும் என தொடை தட்டி நிற்கிறது தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழகம்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த peட்டா (PETA) அமைப்பு, கடந்த ஆண்டு அதற்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது. இதனால் பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் உருவானது. பீட்டாவின் இந்த முயற்சிக்கு இந்திய விலங்குகள் நலவாரியம் பெருமளவில் ஆதரவு கொடுத்தது. ஜல்லிக்கட்டு தடையால் ஏற்பட்ட கொதிப்பு தற்போதுதான் அடங்கியுள்ள நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் துாதராக ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவை நியமித்து வந்த தகவல் ஜல்லிக்கட்டுஆதரவாளர்களை இன்னும் கொதிப்பிற்கு தள்ளியுள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் ரஜினி மற்றும் சவுந்தர்யா உருவபொம்மைகளை கொளுத்தி பரபரப்பை உண்டாக்கியுள்ளனர் அவர்கள்.
தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷிடம் பேசினோம்.
“இந்திய விலங்குகள் நல வாரியத்தின் பிராண்ட் அம்பாசிடராக சவுந்தர்யா நியமிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பேசத்துவங்கியவர், சவுந்தர்யாவின் தந்தையான ரஜினி யாரோ ஒரு சராசரி மனிதரல்ல; பிரபல தமிழ்த்திரைப்பட நடிகர். இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு மனிதர். தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும் இருக்கிறார். அவரது சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தமிழர்கள் கொடுத்தது. இப்படிப்பட்ட நிலையில் அவரது மகளை இந்திய விலங்குகள் நல வாரியத்தின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது.
இந்திய விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டுக்கு எதிரான ஒரு அமைப்பு. சூப்பர் ஸ்டார் என ரஜினி புகழடைந்ததற்கும் அவரது இத்தனை பிரமாண்ட வளர்ச்சிக்கும் முழுமுதற்காரணம் தமிழர்கள். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதனால் தமிழர்கள் எத்தனை துயரத்திற்கு ஆளாகினர் என்பதை ரஜினி நன்கு அறிந்தவர். அப்படி இருந்தும் தன் மகளை இந்திய நலவாரியத் துாதர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் செய்தது ரஜினி தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும். அவரே தன் படங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான காட்சிகளை இடம்பெறச்செய்தவர்தான்.
"என் ஒரு துளி வியர்வைக்கும் ஒரு துளி தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா” என்று சினிமாவில் பாடலை பாடியவர் நிஜமாகவே தமிழர்கள் மீது அன்பு கொண்டிருந்தவரானால் தன் மகளுக்கு இப்படி ஒரு பொறுப்பு வருவதை ஏற்க வேண்டாம் எனஅறிவுறுத்தியிருக்கவேண்டும். ஆனால் ட்விட்டரில் வாழ்த்து சொல்லியிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கு தடை கொடுத்தததால் தமிழர்கள் சோர்ந்து போயுள்ளனர். தமிழர்களுக்கு எதிரான இந்த செயலை இன்னும் வலியுறுத்துவதற்காகவே இப்படி ஒரு பொறுப்பை அவர் மகளுக்கு வழங்கியிருக்கிறது விலங்குகள் நல வாரியம். இதன்மூலம் தமிழகத்தின் உணர்வை கொச்சைப்படுத்துகிறது வாரியம். அதற்கு துணைபோயிருக்கிறார் ரஜினி.
கடந்த ஆண்டு வந்த சென்னை புயல் வெள்ளத்தில் ரஜினி தமிழர்களுக்கு எதுவும் செய்யாமல் மவுனம் காத்தார். காவிரி பிரச்னையிலும் இன்று வரை மவுனம் காத்துவருகிறார். திரைப்படங்களில் மட்டும் தமிழர்கள் மேல் அக்கறை கொண்டவராக நடிக்கும் அவர் நிஜத்தில் அதற்கு நேர்மாறானவராக இருக்கிறார். ரஜினிகாந்த் தமிழர்களுக்கு நல்லது செய்யவில்லை எனறாலும் பரவாயில்லை. கெட்டது செய்யாமல் இருந்தாலே போதும் என்றுதான் கேட்கிறோம். எங்கள் கோரிக்கையை வலியுறுத்த முதற்கட்டமாக ரஜினியை சந்தித்து தன் மகளை பதவி விலகும்படி அறிவுறுத்த மனு அளிக்க இருக்கிறோம். அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் தமிழத்தில் உள்ள ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களுடன் இணைந்து போராட்டங்களை நடத்த உள்ளோம். அதற்குள் சவுந்தர்யாவை துாதர் பொறுப்பிலிருந்து விலக்குவார் என்று நம்புகிறோம்” என்றார்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
பெங்களூருவில் கலவரத்தை தூண்டிய அந்த நான்கு பேர்...!
கன்னடர்கள், பெருமையைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கடந்த சில வருடங்களில் கர்நாடக ரக்ஷனா வேதிகா, ஜெயா கன்னட, ஒக்காடா மற்றும் கன்னடம் சேனா எனப் பல அமைப்புகளை உருவாகியுள்ளனர்.
இதனிடையே இந்த பிரச்னை தொடர்பாக தன்னை சந்தித்த தனது மகள் சவுந்தர்யாவுக்கு , 'ஏற்கனவே குடும்ப பிரச்னையில் இருக்கிறாய். இந்த சமயத்தில் இம்மாதிரி சிக்கலில் சிக்க வேண்டாம். இது இன்னும் உனக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். நல்ல முடிவை எடு” என்று என ரஜினி அறிவுரை சொன்னதாக கூறப்படுகிறது.
என்ன நடக்கப்போகிறது?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.