தனது வாழ்நாள் முழுவதையும் ஏழை மக்களுக்காகவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அர்பணித்தவர் அன்னை தெரசா. இதற்காக அவரது சேவையை பாராட்டி அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது சேவையை பாராட்டி வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
போப் பிரான்சிஸ் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்குகிறார். இந்த விழாவில் பல நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
1910ம் ஆண்டு அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசா. 1929ம் ஆண்டு கன்னியாஸ்திரியாக இந்தியாவின் டார்ஜிலிங்கில் தன் பணியை துவங்கினார். 1950–ல் ‘‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’’ என்னும் சேவை அமைப்பை கொல்கத்தாவில் தொடங்கினார். இதன் மூலம் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பலருக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தொடர்ந்து சேவை செய்தார். செப்டம்பர் 5, 1997ம் ஆண்டு இறுதி மூச்சு உள்ள வரை தன்னை சேவைக்காக அர்பணித்தார் அன்னை தெரசா.
அவரது நினைவு தினத்தை ஒட்டி அவருக்கு புனிதர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு கலந்து கொள்கிறது. இதேபோல், மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதையும், அவரது சேவையையும் பாராட்டி ட்விட் செய்துள்ளார் மம்தா.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.