காவிரிப்பிரச்னையில் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் கர்நாடகத்தில் கலவர சம்பவங்களை அரங்கேற்றிவருகின்றனர் அங்குள்ள சில அமைப்புகள். இதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில மொழி உணர்வாளர்கள் இதற்கு எதிர்வினையாற்றத் துவங்கியுள்ளனர். இரு மாநிலங்களிலும் ஒருவித பதற்றத்தை இந்த நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சிலரால் இந்த கலவர சம்பவங்கள் குறித்து பகிரப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள், மற்றும் பதிவுகள் பார்ப்பவர்கள் மனதில் ஒருவித உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது.
இனம் மொழி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களான கலைஞர்கள் இந்த பிரச்னையில் இரு மாநில மக்களுக்கும் கருத்து தெரிவித்துள்ளனர்.
45 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் பேசும் நடிகர் பிரகாஷ்ராஜ், “சட்டத்தை மதிக்கவேண்டும். பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது. மொழி, மாநில அளவில் பிரிந்துகிடக்காமல் மனிதர்களாக நாம் இருக்கவேண்டும். எந்த பிரச்னையையும் சட்டப்படியே அணுகவேண்டும். வன்முறை தீர்வாகாது' என கருத்து தெரிவித்துள்ளார்.
வீடியோவைக்காண...

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.