18 ராணுவ வீரர்கள் எல்லையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவில் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியவண்ணம் இருக்கின்றன. அரசுத் தரப்பில், ‘தக்க சமயத்தில் இதற்கான பதிலடி தரப்படும்’ என அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தன் புதிய முடிவுகளை இந்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதில், மற்றொரு திருப்பமாக ராஜ்தாக்கரே தலைமையிலான, ‘மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா’ அமைப்பு பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்களை இந்தியாவைவிட்டு வெளியேறச் சொல்லிக் கட்டளையிட்டுள்ளது. மேலும், ‘மீறுபவர்கள் அடித்து விரட்டப்படுவார்கள்’ என்று மிரட்டல் விடுத்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபாவத் கான், அலி ஜஃபர், மஹீரா கான் பாடகர் ராஹத் பதே அலி கான் உட்பட இந்தியாவில் தங்கி இருக்கும் முன்னணிக் கலைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனாவின் இந்த அறிவிப்புக்கு, ஆதரவும் எதிர்ப்புத் தெரிவித்தும் பாலிவுட்டிலிருந்து பல குரல்கள் எழுந்துள்ளன.
எதிர்ப்புத் தெரிவிக்கும் கலைஞர்கள் இந்தியில் 125-க்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் நிலையில் ஷாருக்கான், மகேஷ் பட், கரண் ஜோகர் போன்றவர்கள் ஏன் மீண்டும் மீண்டும் பாகிஸ்தானிலிருந்து நடிகர்களைத் தருவித்து நடிக்கவைக்க வேண்டும்... நம் மக்களைக் கொல்லுபவர்களுக்கு நம் நாட்டில் எதற்கு அனுமதி அளிக்க வேண்டும்? அப்படி இங்கே இருக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களா என்கிற அடிப்படையில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மறுபுறம், வெளியேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தியக் கலைஞர்கள், “தீவிரவாதிகளின் தாக்குதலுக்குச் சகக் கலைஞர்களை வெளியேற்றுவது நியாயமில்லை. மோடி அரசு, தாக்குதல் விவகாரத்தில் தலையிட்டுத் தகுந்த பதில் அளித்தால் மட்டுமே இதற்கான பதில் கிடைக்கும்” என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் வெற்றி நடைபோடும் சீரியல்கள் இங்கே இந்தியாவிலும் ‘கலர்ஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. இனிமேல் அந்த சீரியல்களும் இங்கே ஒளிப்பரப்பாகாது என்று தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், சில தொலைக்காட்சி சேனல்களும் பாகிஸ்தான் நடிகர்களை வெளியேறும்படி நிர்பந்தித்து வருகிறது.
கலைஞர்கள் வெளியேறுவதை எதிர்த்தோ அல்லது ஆதரவு தெரிவித்தோ மத்தியிலிருந்து எந்தவித பதிலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.