காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நேற்று நள்ளிரவு அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கும்பல் கும்பலாக வந்தனர். அமைச்சர்களின் பி.ஏ-க்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என்று பெருங்கூட்டமே மருத்துவமனை ஏரியாவில் கூடினர். இதனால், பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போலோ மருத்துவமனை சாலையில் போக்குவரத்தை போலீஸார் நிறுத்திவிட்டனர். ஏற்கனவே மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையின் உள்ளே, வெளியே போகமுடியாமல் போலீஸார் தடுத்தனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இன்று காலை மருத்துவமனையில் கட்சிக்காரர்கள் குவிந்திருக்கும் நிலவரங்களை ஜெயலலிதா, மருத்துவமனை தரப்பினரிடம் கேட்டு தெரிந்துகொண்டாராம். பிறகு, உதவியாளர் மகாலிங்கத்தை அழைத்து, சாதாரண ஜுரம் தானே?..சிகிச்சை முடிந்துவிட்டது. வீடு திரும்ப போகிறேன். அமைச்சர்களை அலுவலகப்பணியை போய் கவனிக்கச் சொல்லுங்கள். மருத்துவமனையில் யாரும் நிற்கக்கூடாது' என்று உத்தரவிட்டாராம். அதையடுத்து, மகாலிங்கம் மூலம் அமைச்சர்களுக்கு தகவல் பரிமாறப்பட்டது. அடுத்த நிமிடமே, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மருத்துவமனையை விட்டு கோட்டைக்கு கிளம்பினர்.
September 24, 2016
அமைச்சர்கள் அனைவரும் உடனே வெளியேறவும் - ஜெயலலிதா திடீர் உத்தரவு
அமைச்சர்கள் அனைவரும் உடனே வெளியேறவும் - ஜெயலலிதா திடீர் உத்தரவு
Reviewed by Anitha
on
September 24, 2016
Rating: 5
Reviewed by Anitha
on
September 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.