ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியின் மத்தியப் பகுதியில் கடந்த 24ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில், 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானது. மலைப்பகுதிகள் நிறைந்த அக்குமோலி, அமெட்ரிஸ் ஆகிய நகரங்கள் சிதைந்து போயின.நிலநடுக்கத்தில் சிக்கி 297 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மலைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டதால், மீட்புப் பணியும் சவால் நிறைந்ததாக இருந்தது.
பெஸ்கரா டெல் ட்ரான்டோ என்ற சிறிய நகரமும் நில நடுக்கத்தில் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது. இந்த நகரில் பல வீடுகள் இடிந்து போயின. இடிபாடுகளுக்கிடையே ஜார்ஜியா என்ற 4 வயது சிறுமியும் அவரது சகோதரி கியிலியாவும் ஆழமான பகுதியில் சிக்கியிருந்தனர். மீட்புக்குழுவினரால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இடிபாடுகளுக்கிடையே இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியபடி மயங்கி கிடந்தனர். இந்த சிறுமிகளை மீட்புக்குழுவில் இடம் பெற்றிருந்த, லியோ என்ற லெப்ரடார் நாய் கண்டுபிடித்து மீட்புக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தது உடனடியாக மீட்புக்குழுவினர் அந்த சிறுமிகளை மீட்டனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட கியிலியா மருத்துவமனையில் இறந்தார். தீவிர சிகிச்சைக்குப் பின், ஜார்ஜியா உயிர் பிழைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் இத்தாலிக்கு வந்தார். தலைநகர் ரோமில் இத்தாலி பிரதமர் மாட்டோ ரென்சியை சந்தித்து பேசினார். அப்போது, நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட குழுவினருக்கு ஏஞ்சலா மெர்கல் பாராட்டு தெரிவித்தார். அந்தக் குழுவில் லியோவும் இடம் பெற்றிருந்தது. இத்தாலி பிரதமர் ரென்சி, ஜெர்மனி அதிபருக்கு லியோவை அறிமுகப்படுத்தி வைத்தார். ஏஞ்சலா மெர்கல் லியோவின் தலையை வருடிக் கொடுத்ததுடன், அதற்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
நிலநடுக்கம் நிகழ்ந்த பகுதியில் அவ்வப்போது நிலஅதிர்வுகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த புதன்கிழமை பெஸ்கரா பகுதியில் 3.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகளுக்கு திரும்பி செல்ல மக்கள் தயங்கி வருகின்றனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடிழந்து தவிக்கின்றனர். இவர்கள் சாலையோரங்களில் கூடாரம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். நில நடுக்கம் நிகழ்ந்து ஒரு வார காலமாகியும் இன்னும் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, மார்னிலோ நகரில் உள்ள ஃபெராரி கார் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், ''நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெட்ரிஸ் நகரில் ஜெர்மனி அரசு சார்பாக பள்ளிக் கூடம் கட்டிக் கொடுக்கப்படும். என்றும் இத்தாலி அரசிடம் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் தொடங்கும்'' என அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.