Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 17, 2016

" எங்களை கொலைகாரர்கள் போல சித்தரித்தனர்" - தோனி ஓபன் டாக்


2007 உலக கோப்பை தொடரில் தோல்வியடைந்த பின், நாடு திரும்பிய எங்களை ஊடகங்கள் ஏதோ பயங்கவராதிகள் போல, கொலைகாரர்கள் போல பாவித்தன என மனம் திறந்துள்ளார் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி.

மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த, 2007 உலக கோப்பைத் தொடரில் வங்கதேசம், இலங்கையிடம் தோல்வியடைந்து, முதல் சுற்றுடன் வெளியேறியது ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி. சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணி, படு மோசமாக விளையாடியதால், வீரர்களின் வீடுகள் மீது ரசிகர்கள் கல்லெறிந்தனர். ராஞ்சியில் இருந்த தோனியின் வீடும் தப்பவில்லை. இந்த சம்பவம்தான் தோனிக்கு பெரிய படிப்பினையை பின்னாளில் தந்திருக்கக் கூடும்.

தோல்விக்குப் பின் நாடு திரும்பியபோது நடந்த களேபரங்கள் குறித்து, தோனி தற்போது நினைவு கூர்ந்துள்ளார். நியூயார்க் நகரில் நடந்த ‘MS Dhoni: The Untold Story’ என்ற தன் படத்துக்கான ப்ரமோ விழாவில் தோனி பேசியதாவது:

‘‘நாங்கள் டில்லியில் வந்து இறங்கியதும் ஏராளமான ஊடகங்கள் எங்களை வட்டமிட்டன. உடனடியாக நாங்கள் போலீஸ் வேனில் அமர்ந்தோம். நான் சேவாக் அருகில் உட்கார்ந்திருந்தேன். அது மாலை வேளை. எங்கள் வாகனம் 60& 70 கி.மீ., வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இது இந்திய சாலைகளில் பயணிப்பதற்கான வழக்கமான வேகம். நாங்கள் சென்ற பாதை குறுகலானது. ஆனால், ஊடக வாகனங்கள் எங்களை ‘சேஸ்’ செய்ய முயன்று கொண்டிருந்தன. புகைப்படக்காரர்கள் எங்களை ஃபோட்டோ எடுத்தனர். வீடியோ எடுப்பதற்காக எங்கள் மீது வெளிச்சம் பாய்ந்தது.

நாங்கள் எதோ கொலைகாரர்கள் போல, பயங்கரவாதிகள் போன்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தனர். இந்த சம்பவம் என்னை அப்படித்தான் நினைக்க வைத்தது. கடைசியில் அவர்கள் (மீடியா) எங்களை சேஸ் செய்து விட்டனர். ஒரு வழியாக  போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றதும், அங்கு 20 நிமிடங்கள் இருந்து, பின் எங்கள் காரில் ஏறி சென்றோம். இந்த சம்பவம்தான் என்னை ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரனாக, நல்ல மனிதனாக மாற்றியது’’ என்றார் தோனி.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம், தோனி இந்திய டி- 20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதும், தென் ஆப்ரிக்காவில் நடந்த முதல் டி&20 உலக கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதும், பின்னாளில் தோனி வெற்றிக் கேப்டன் என பெயர் வாங்கியதும் வரலாறு. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.