சிறிய ஏமாற்றத்தையோ, இழப்பையோ கூட தாங்கிக்கொள்ள முடியாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கும் இன்றைய இளம் சந்ததியினர் மத்தியில், தன் இரு கால்களையும் இழந்து விட்டாலும், நம்பிக்கையோடு போராடி வாழ்ந்து காட்டி வருகிறார் தருமபுரியைச் சேர்ந்த சிவலிங்கம்.
தருமபுரி மாவட்டம் கோள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம். 2002ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்தார். திடீரென விபத்தில் கால்களை இழந்தவரின் குடும்பத்துக்கு அந்த கிராமத்து மக்கள் அப்போது சொன்ன ஆறுதல் என்ன தெரியுமா.? இரண்டு கால்களும் இல்லாதவரை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள்.? விஷம் வைத்து கொன்றுவிடுங்கள் என்பதுதான். சிவலிங்கமும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுதான் அப்போது நினைத்திருக்கிறார். ஆனால் இடையில் ஏதோ நம்பிக்கை துளிர் விட... இப்போது இரண்டு கால்களும் இல்லாத சிவலிங்கம்தான் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்கிறார். நான்கு மாடுகள் வளர்க்கிறார். வீட்டுக்கு சின்னசின்ன வேலைகள் செய்துதருகிறார் இரண்டு கால்களும் இல்லாவதவர்தான் இப்போது அந்த குடும்பத்தையே தாங்குகிறார்.

சிவலிங்கத்துடன் பேசும் போது வார்த்தைக்கு வார்த்தை நம்பிக்கை வெளிப்பட்டது. “என்னால மரம் ஏற முடியாது. ஊர் சுத்த முடியாது அவ்வளவுதான். வேற என்ன செய்ய சொல்றீங்களோ செய்றேன். வயலுக்கு தண்ணி கட்டுவேன். மாட்டுக்கு புல் அறுப்பேன், பால் கறப்பேன். நான் என்ன செய்யணும் சொல்லுங்க செய்யுறேன்," என நம்முடனான உரையாடலை ஆரம்பித்தார் சிவலிங்கம்,
“2002ல் பென்னாகரத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பைக்ல திரும்பி வந்துகிட்டு இருந்தேன். பின்னல வந்த லாரி மோதிருச்சி. கண்முழிச்சி பாத்தா ஆஸ்பத்திரில கிடந்தேன். கால் சிதைஞ்சிருச்சி எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல ரெண்டு கால்களையும் எடுத்துட்டாங்க. நம்ம குடும்பத்த யாருடா காப்பாத்துறது? கால் இல்லாம கக்கூஸுக்கு கூட போக முடியாதே? நாம எப்படி பொழைக்முடியும்னு மண்டைக்குள்ள கலவரம் ஆரம்பிச்சிருச்சி. ஒரு வருஷத்துக்கு மேல படாதபாடு பட்டேன்.

ஒண்ணுக்கு போறதுக்கு கூட பொண்டாட்டி தூக்கி கொண்டுவிடுற மாதிரி இருந்துச்சு. வலியும்,வேதனையும் தாங்க முடியல. லட்சக்கணக்கா செலவு செஞ்சோம் செயற்கை கால் பொருத்துனோம். ஆனால், முட்டிக்கு மேல போயிடுச்சிங்கிறதால. அத போட்டுகிட்டும் நடக்க முடியலை. செத்துறலாமானு நெனைச்சேன். அப்பதான் என் பொண்டாட்டி வந்து ஒரு விஷயத்த சொல்லி அழுதா... ஊருக்குள்ள உங்கள விஷம் வச்சி கொன்னுற சொல்லறங்கனு சொன்னா.
கொஞ்ச அதிர்ச்சியா இருந்துச்சு. ஆனா நான் வாழ்ந்து காட்டணும்னு எனக்கு தோணுனதும் அப்பத்தான். 'நாம சாகணும்னு நினைச்சவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும். கால் இல்லனாலும் காலத்தை ஓட்டுறாம்ப்பா'னு நம்மள பாத்து எல்லாரும் வியக்கணும்னு முடிவெடுத்தேன். கைகளை வைத்தே நகர ஆரம்பிச்சேன்.. காலில் காயம் ஏற்பட்டுச்சி... கவசமாக சாக்கை கட்டிக்கொண்டு நகர ஆரம்பிச்சேன் சின்ன சின்ன வேலைகள் செய்ய ஆரம்பிச்சேன்.. இப்போ 5 ஏக்கர் விவசாயத்தை நான்தான் கவனிக்கிறேன். நான் வளக்குற நாலு மாட்டுக்கும் நான்தான் புல் அறுக்குறேன். வயல்ல புல் அறுத்து கட்டி வச்சிருவேன். என்னால தூக்கிட்டு வரமுடியாதுங்குறதால என் பொண்டாட்டி வந்து தூக்கிட்டு வந்துருவா. நான்தான் பால் கறக்குறேன்," எனச்சொன்னவர், அத்தனை வேலைகளையும் நமக்கு செய்தும் காட்டினார். என்ன கொன்னுட சொன்ன ஊருக்காரங்க இப்ப என்னைய பாத்து பெருமைப்படுறாங் பாராட்டுறாங்க. ஒண்ணே ஒண்ணுதான் தம்பி ஊரு ஆயிரம் பேசும். நாம வாழ்ந்து காட்டணும் அவ்வளவுதான் நம்பிக்கை நிறைந்த குரலில் முடிக்கிறார் சிவலிங்கம்.
ஆம்... நம்பிக்கை தான் வாழ்க்கை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.