Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 3, 2016

’வாழு வாழ விடு’ காவிரி விவகாரத்தில் கர்நாடகாவைக் கண்டித்த உச்சநீதிமன்றம்!


சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெற்றுத் தரக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தது. அதன் அடிப்படையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு மாநில அரசுகளின் தரப்பை கேட்டறிந்த நீதிமன்றம், ‘தமிழகத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் நீர் வழங்குங்கள். அவர்களை வாழவிடுங்கள்’ என்று அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி தண்ணீரை சரியான முறையில் கர்நாடகம் தர மறுத்து பல்வேறு காரணங்களை சொல்லி வருகிறது. கடந்த ஆண்டு வழங்கவேண்டிய 35 டி.எம்.சி தண்ணீரையும், இந்த ஆண்டு வழங்கி இருக்கவேண்டிய  27 டி.எம்.சி நீரையும் இதுவரை கர்நாடகா வழங்கவில்லை. ஆனால், தமிழகம் 50 டி.எம்.சி தண்ணீர் வழங்கினால் கூட போதும் என்று கூறி இருந்தது. அதையும் கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வந்தது.



தங்களுக்கு இந்த பருவத்தில் 180 டி.எம்.சி தண்ணீர் இருக்க வேண்டும் என்றும், ஆனால் 80 டி.எம்.சி மட்டுமே கையிருப்பாக இருப்பதால் தண்ணீர் கொடுக்க முடியாது என்றும் கர்நாடக அரசு காரணம் சொன்னது. இதனைத்தொடர்ந்து தமிழக விவசாயிகள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தண்ணீர் கொடுக்கும்படி வலியுறுத்தி வந்தும் எந்த வித முன்னேற்றமும் இல்லை.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக கர்நாடகா தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, ‘காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை கர்நாடக அரசு ஏன் நடைமுறைப்படுத்தக்கூடாது. கடந்த மூன்று மாதங்களில் தமிழக விவசாயிகள் நீரின்றி தவித்து வருகிறார்கள்.  கர்நாடக அரசு அவர்களின் நிலையை உணர்ந்து யோசிக்க வேண்டும். 2007ம் ஆண்டு சொன்ன நடைமுறையை கர்நாடக அரசு பின்பற்றவே இல்லை. இருமாநில அரசு, மக்கள், விவசாயிகளின் பிரச்சினையை கவனத்தில் கொள்ள வேண்டும். இது அனைத்து மக்களின் வாழ்வாதாரம். வாழு வாழ விடு என்கிற வார்த்தையை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும். மழை வருமா? வராதா? என்று சொல்ல முடியாத நிலையில், கர்நாடகம் மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.