Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 18, 2016

KPN -42 பஸ்களை எரித்த பெண் ரௌடி கைது – சிசிடிவி மூலம் சிக்கினார்



பெங்களூரில் நடந்த கலவரத்தின்போது கே.பி.என் டிராவல்சுக்கு சொந்தமான பஸ்களை எரிப்பதற்கு, துணையாக இருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் அவர்களது உடமைகள், தொழில் நிறுவனங்கள், ஏராளமான பொருட்கள் சேதமானது. நூற்றுக்கணக்கான பஸ்கள் மற்றும் லாரிகள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.
Image result for kpn bus burned in bangalore
கடந்த 12ம் தேதி, நடந்த வன்முறையின்போது, பெங்களூர், ராஜராஜேஸ்வரி நகர காவல் எல்லைக்கு உட்பட்ட, டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் 42 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
தீ வைப்பு சம்பவம் மாலை 4 மணி முதல் 4.30க்குள் நடந்துள்ளது. 22 டிரைவர்களும், 2 கிளீனர்களும், அங்குள்ள ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இரவில் பணியாற்ற வேண்டும் என்பதால் அவர்கள் அயர்ந்து தூங்கினர்.
தப்பியோடிய டிரைவர்கள் பஸ் மீது பெட்ரோல், டீசல் ஊற்றப்படுவது தெரியவந்ததும், பஸ்சுக்குள் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த டிரைவர்கள் சமயோஜிதமாக வெளியே தப்பியோடிவிட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Image result for kpn bus burned in bangalore
கைது செய்யப்பட்ட வாலிபர்கள், அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கலவர பின்னணியில் ஒரு பெண் இருந்தது தெரியவந்தது.
இதற்கிடையில், அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இளம் பெண் ஒருவர் பெட்ரோல், டீசலை சப்ளை செய்து பஸ்களை கொளுத்த உதவியது காட்சிகளில் பதிவாகி இருந்தது.
 இதையடுத்து கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார், அந்த பகுதி முழுவதும் இளம்பெண் குறித்து விசாரித்தனர்.
அதில், யசோதாநகர் பகுதியை சேர்ந்த பாக்யஸ்ரீ (22) வயது என்பவர், கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கர்நாடகா மீதான அபிமானத்தால் இவ்வாறு செய்ததாக பாக்யஸ்ரீ கூறினார்.
ஆனால் போலீசாருக்கு, பாக்யஸ்ரீயை யாராவது தூண்டி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
 மேலும் போலீசார், பாக்யஸ்ரீ மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், அவருக்கு ஜாமீன் கிடைக்கவே 6 மாதங்களாவது ஆகும் என்று தெரிகிறது.
Image result for kp natarajan
 இதுகுறித்து கே.பி.என் உரிமையாளர் நடராஜன் கூறுகையில், போலீசாரிடம் சிக்கியுள்ள பெண்தான், கலவரக்காரர்களை தூண்டிவிட்டு, தீ வைப்பை நிகழ்த்தினார் என்பதை, சம்பவ இடத்தில் இருந்த எங்கள் டிராவல்ஸ் டிரைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். பஸ்களை எரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விரைவில் முதல்வர் சித்தராமையாவிடம் மனு அளிக்க உள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.