காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு, கர்நாடகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் வட்டத்தில் உள்ள மலைய மாதேஸ்வரா கோயிலில் ரூ.46 கோடியில் வளர்ச்சிப் பணிகளைத் முதல்வர் சித்தராமையா தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மகாதேவப்பா, மகாதேவ பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின் சித்தராமையா, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ''தமிழகத்துக்கு காவிரியிலிருந்து செப்டம்பர் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், காவிரிப்படுகையில் உள்ள அணைகளில் நீர் வற்றியுள்ளதால், குடிநீருக்கு மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், இதுகுறித்து கர்நாடக சட்டப்பேரவை, மேலவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு மனு தாக்கல் செய்துள்ளோம். இதுதொடர்பான விசாரணையின் முடிவில், கர்நாடகத்துக்கு ஆதரவாக நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.