Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்கப்படும்: கனத்த இதயத்துடன் முடிவெடுத்துள்ளதாக சித்தராமய்யா பேட்டி


காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்றும், கனத்த இதயத்துடன் விரைவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். காவிரியில் வினாடிக்கு 15ஆயிரம் கன அடி நீர் வீதம், பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து, பெங்களூருவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் பெய்த மழையின் அளவு, நீர் இருப்பு, நீர் தேவை குறித்து விரிவாக ஆலோசித்ததாக தெரிவித்தார். கர்நாடகத்தின் குடிநீருக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்த முதலமைச்சர், இதுவரை காவிரியில் தமிழகத்திற்கு 33 டி.எம்.சி நீர் திறந்துவிடப்பட்டிருப்பதாக கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்றும், விரைவில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கனத்த இதயத்துடன் முடிவு செய்திருப்பதாகவும் கூறிய சித்தராமையா, இவ்வழக்கில், நாளை உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.