காவிரி விவகாரத்தில் முழு அடைப்பு போராட்டம் பலன் தராது என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
காவிரியில் விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, நாளை தமிழகம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம் நடக்க உள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கர்நாடகாவில் வசிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் 12ம் தேதி கலவரம் வெடித்தது. சில மணி நேரங்களில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் வன்முறைகள், முழு அடைப்பு பலன் தராது. நாளைய முழு அடைப்பு போராட்டத்தில் கன்னடர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். முழு அடைப்பு போராட்டத்தின் போது வன்முறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். வன்முறை ஏற்பட்டால், இரு மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். காவிரி விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என இங்குள்ள மீடியாக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் நீங்களும் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.