Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 12, 2016

நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து கட்சி பொறுப்பு பறிப்பு: ஜெயலலிதா அதிரடி


கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் செய்தித் தொடர்புக்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் நத்தம் விஸ்வநாதனை நீக்கியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மகன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

இந்தநிலையில், நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலும், கட்சியின் செய்தித் தொடர்புக்குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் நத்தம் இரா.விஸ்வநாதன் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.