Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 27, 2016

மாலை மெடிக்கல் ரிப்போர்ட்... காத்திருக்கும் ஜெயலலிதா!


முதல்வர் ஜெயலலிதா அப்போலோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி ஐந்து நாட்கள் ஆகிறது. ஒரு வாரத்திற்கு முன்பே, 'ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக்காக அப்போலோ வரக்கூடும். சில நாட்கள் தங்கவேண்டிவரலாம்'  என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர். அதையடுத்து, அவர் தங்குவதற்கான அறையை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து அதில் டைல்ஸ், பாத்ரூம், ஷவர்...ஆகியவற்றை மாற்றினார்களாம்.



அதன்பிறகுதான், ஜெயலலிதா அப்போலோவிற்கு வந்தார். கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரியில் திரண்டிருந்த கரை வேஷ்டிகள் கூட்டம் படிப்படியாக  இப்போது குறைந்துவிட்டது. உள்ளாட்சி தேர்தல் வேலையைப் போய் கவனிக்கும்படி ஜெயலலிதா உத்தரவிட்டதால் அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டனர். ஆஸ்பத்திரியின் இரண்டாவது மாடியில் உள்ள ஐ.சி.யூ. அறையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார் . அவரது அறையில் நடைப்பயிற்சி மேற்கொண்டாராம்.


ஜெயலலிதாவின் அறையில் சசிகலா, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகள் டாக்டர் ராஜ மாதங்கி மற்றும் அவரின் கணவர் டாக்டர் விக்ரம்...ஆகிய மூவரும்தான்  அடிக்கடி போய் வருகிறார்கள். மற்றவர்களுக்கு அனுமதியில்லை.  மருத்தவர்களிடம் நாம் பேசியபோது, ''இன்று(திங்களன்று) மாலை ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் ஒன்று வரவேண்டியுள்ளது. அது வந்தவுடன்தான் அடுத்தகட்ட சிகிச்சை திட்டமிடப்படும்'' என்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா நள்ளிரவு நேரத்தில் ஆஸ்பத்திரியை விட்டு வீட்டுக்கு செல்லவும் திட்டமிட்டிருக்கிறாராம். டிராஃபிக் பிரச்னை, தொண்டர்கள் ஆர்ப்பரிப்பு...இவற்றை தவிர்க்கவே இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறாராம்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.