Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

2020- ஜப்பானின் கேட்ஜட் ஒலிம்பிக்...டிஜிட்டல் பதக்கம்!


வரும் 2020ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு, தயாராகிவருகிறது உலகின் டிஜிட்டல் நகரமான ஜப்பான். அதன் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள, ஒலிம்பிக் போட்டிகளின் ஒவ்வொரு அம்சத்திலும், டிஜிட்டல் மயம் தெரிகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, வழங்கப்பட உள்ள பதக்கங்களிலும் அதை பிரதிபலிக்க உள்ளது ஜப்பான். பதக்கங்களுக்கான,  தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் உள்ளிட்டவற்றை, எலக்ட்ரானிக் குப்பைகளில் இருந்து எடுக்கப்போவதாக, ஒலிம்பிக் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் அங்கு நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்டு இந்த முடிவை ஜப்பான் எடுத்துள்ளது.

ஜப்பானுக்கு சவாலாக இருக்கும் ‘டிஜிட்டல்’ குப்பை

வீட்டுச் சமையலறை தொடங்கி நாட்டின் அதிகார மையயமாகத் திகழும் ‘நேஷனல் டயட்’ வரை, கேட்ஜெட்டுகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது ஜப்பான். அதன் எலக்ட்ரானிக் காதல், உலகம் அறிந்தது. அது தவிர உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 16 சதவிகிதம், வெள்ளியில் 22 சதவிகிதம் ஜப்பான் எலெக்ட்ரானிக் நிறுவனங்களிடம்தான் உள்ளன. இதனால், ஒவ்வொரு வருடமும் 6 லட்சத்து 50 ஆயிரம் டன்  எலெக்ட்ரானிக் குப்பைகள் ஜப்பானில் உருவாகிறது. அவற்றில், ஒரு லட்சம் டன் எலெக்ட்ரானிக் குப்பைகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மற்றவை அப்படியே தேங்கிவிடுகின்றன. இப்படி நாளுக்குநாள் பெருகும், எலெக்ட்ரானிக் குப்பைகள் அந்த நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த நினைத்த ஜப்பான், ஏதேதோ முயற்சிகளை எடுத்தது; அறிவிப்புகளை வெளியிட்டது. ஜப்பானியர்கள், தங்களிடம் இருக்கும் உபயோகமற்ற எலக்ட்ரானிக் பொருட்களை ஒப்படைக்கும்படி, அந்த நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது; ஒவ்வொரு வருடமும் தனிநபர் கணக்கில், குறைந்தபட்சம் ஒரு கிலோ எலக்ட்ரானிக் குப்பைகளை சேகரிக்க இலக்கு நிர்ணயித்தது. ஆனால், ஒன்றும் வேலைக்காகவில்லை. இன்றைய தேதிக்கு, ஒரு ஜப்பானிய குடிமகனிடம் இருந்து, 100 கிராம் அளவுக்குக்கூட எலெக்ட்ரானிக் குப்பைகளை  சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சேகரிக்க முடியவில்லை.

ஒலிம்பிக் காய்ச்சல்

எலெக்ட்ரானிக் குப்பைகளை கட்டுப்படுத்த கடும் முயற்சிகளை எடுத்துவரும் ஜப்பான், இதற்காக அங்கு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்த நினைத்தது. ஏனென்றால், இன்றைய தேதியில் 2020-ல் அங்கு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் குறித்த ஆர்வம் அந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் தொற்றிக் கொண்டுள்ளது. அதைச் சரியாக கணித்த ஜப்பான், ஒலிம்பிக் போட்டிகளை நடத்த, எலக்ட்ரானிக் கழிவுகள் தேவைப்படுகிறது என்று அறித்தால், அது மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்று திட்டமிட்டது. அதன் ஒரு பகுதியாகவே, ஒலிம்பிக் வெற்றி வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களை, எலெக்ட்ரானிக் குப்பைகளில் இருந்து தயாரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

தென் அமெரிக்காவில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில்,  கண்ணாடிகளில் இருந்து எடுக்கப்பட்ட தங்கம், வெள்ளியைப் பயன்படுத்தியே பதக்கங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.