விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள டி.கே.மண்டபம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகிறார்கள். அதற்கு கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருட்டு வழக்கை விசாரிக்கச் சென்ற காவல் துறையினர் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரை கைதுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த லக்ஷ்மி, கார்த்திகா, ராதிகா, வைகேஸ்வரி ஆகிய நான்கு இருளர் பெண்களையும் விசாரணை என்று கூறி அழைத்துச் சென்றபோது ஒரு காட்டுப் பகுதியில் அந்த நான்கு பெண்களையும் காவல் துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாஜிஸ்திரேட் தலைமையில் தமிழக அரசு விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதன் தொடர்புடைய சீனுவாசன், ராமநாதன், தனசேகரன், பக்தவத்சலம், கார்த்திகேயன் ஆகிய 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விசாரணை முடிவடையாத நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்களுக்கு வெவ்வேறு மாவட்டங்களில் மீண்டும் பணி வழங்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை எந்த நீதியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வழக்கில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
வன்கொடுமையில் ஈடுபட்ட 4 போலீஸார் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் புகழேந்தி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை குறித்த அறிக்கை, ஆவணங்களைத் தாக்கல் செய்ய ஏற்கெனவே தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் மகாதேவன் முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை குறித்த அறிக்கையை திருக்கோவிலூர் கோட்டாட்சியர் செந்தாமரை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், ‘‘பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்கெனவே நிவாரணத் தொகை ரூ.5 லட்சம் அரசு கொடுத்துள்ளது. இனி, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேணடும் என்றால் இருளர் என்ற சாதிச் சான்று கொடுக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற சாதிச் சான்று அவர்களிடம் இல்லை. அவர்களின் இடம்பெயர்வு நடந்துகொண்டே உள்ளது. ஊர்மக்கள் இருளர் என்று சொல்கிறார்களே தவிர, அதற்கான ஆதாரம் இல்லை என்கிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது.
‘‘சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்!’’
இதுதொடர்பாக இந்த வழக்கின் மனுதாரர் புகழேந்தியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘ஐந்து வருடங்களாக விசாரணை நடைபெறவில்லை. வழக்கில் தொடர்புடைய 5 காவல் துறை அதிகாரிகள் சஸ்பெண்ட செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட காவலர்களைப் பணியில் அமர்த்தி இருப்பது தவறு. ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது தொடர்பாக ஏதாவது பதில் கொடுத்துள்ளீர்களா என்பது எங்கள் தரப்பு வாதமாக இருந்தது. அதேபோன்று, இந்த வழக்கில் காவல் துறை சம்பந்தபட்டிருப்பதால் சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரி இருக்கிறோம். ‘வன்கொடுமை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும்’ என்றால், சாதிச் சான்று வேண்டும் என்று சொல்லப்படுகிறது. காலம் தாமதமாகி இந்தப் பதிலை சொல்வது ஏற்புடையது அல்ல. மாஜிஸ்திரேட் ரிப்போர்ட் வாங்கி உள்ளார்கள்.
அதில், ‘இந்தப் பெண்களைக் கூட்டிச்சென்றது உண்மை; ஆடைகளைக் கலைத்தது உண்மை; அவமானப்படுத்துதல், துன்புறுத்துதல் போன்றவை நடந்தது உண்மை’ என்று கூறப்பட்டுள்ளது. ‘இந்த அரசு, தண்டனை கொடுக்கும்போது இரண்டு இங்கிரிமென்ட் மட்டும் நிறுத்தும். அது, கடுமையான தண்டனையை போலீஸாருக்கு தருவதில்லை. காவல் துறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் கடுமையான தண்டனையை இந்த அரசு தருவதில்லை’ என்று இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி கண்டித்துள்ளார். ‘ஒழுங்கு நடவடிக்கையில் என்ன செய்துள்ளீர்கள்?, புலன் விசாரணை எந்த அளவுக்கு இருக்கிறது’ என்று முழுமையான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரத்தில், ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை பதிவாளருக்கு இந்த வழக்கை மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்’’ என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
‘‘மரண வலியை தருகிறது!’’
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த உறவினரான வள்ளியிடம் பேசினோம். ‘‘என்னுடைய இரண்டு மகள் மற்றும் இரண்டு மருமகள்களுக்கு இந்தக் கொடுமை நேர்ந்தது. என் கண்ணெதிரே நடந்த சம்பவத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அது, மரண வலியைத் தருகிறது. எங்களுக்கு அரசு, எந்த உதவியும் செய்யத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட போலீஸாருக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். என் மகள்களும், என் மருமகள்களும் அந்தச் சம்பவத்தை நினைத்துக் கதறாத நாட்கள் இல்லை’’ என்று கண்ணீர்வடித்தார்.
‘‘இந்த வழக்கை கைவிட்டுவிடுங்கள்!’’
அந்தப் பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமையை வெளியுலகுக்குக் கொண்டு வந்த பேராசிரியர் கல்யாணி, ‘‘இந்த வழக்கில் உயர் பதவியில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதால், வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று இன்றுவரை முயன்றுவருகிறார்கள். ‘இந்த வழக்கை மட்டும் கைவிட்டுவிடுங்கள்’ என்று என்னிடம் சொன்னார்கள். அதேபோன்று, பாதிக்கப்பட்ட பெண்களையும் மிரட்டினார்கள். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மிகப் பகிரங்கமாகவே நடைபெற்றது. இதன்மூலம் காவல் துறை அதிகாரிகள் பட்டவர்த்தனமாகத் தவறு செய்துள்ளார்கள் என்று தெரிகிறது. அப்படி இருக்கும்போது வழக்கை தமிழக போலீஸார் விசாரிக்கக் கூடாது. நீதிமன்றமே முன்வந்து எச்சரித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இது, காலம் கடந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை. மேலும், இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால், சி.பி.ஐ-க்கு உயர் நீதிமன்றம் மாற்ற வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட போலீஸார் பணிபுரிந்து வருகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இதேபோன்று சாதாரண மக்களையும் அனுமதிக்குமா காவல் துறை? சாமான்யனுக்கு ஒரு சட்டம்... தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமா’’ என்றார்.
‘ஏழைகள், படிப்பறிவு இல்லாதவர்கள்; அடித்தால், கேட்க நாதியில்லாதவர்கள் என்பதால்தான் சட்டத்தின் பார்வைக்கு இந்த அபலைகளின் அழுகை தென்படவில்லை’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.