ரியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்காகத் தங்கம் வென்று தந்த மாரியப்பனை புறக்கணித்து விட்டு இன்டஸ் இன்ட் வங்கி பத்திரிகைகளில் அளித்துள்ள விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரத்திற்காக தற்போது இன்டஸ்இன்ட் வங்கி விளக்கமளித்துள்ளது.
அண்மையில் முடிவடைந்த ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாராலிம்பியன்களை கவுரவிக்கும் வகையில், இன்டஸ் இன்ட் வங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான செய்தித்தாள்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றிருந்த தேவேந்திர ஜார்ஜியா, குண்டு எறிதலில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற வருண் பாட்டியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மேலும் பதக்கம் வெல்லாத 3 வீரர்களும் கூட விளம்பரத்தில் இடம் பெற்றிருந்தனர். விளம்பரத்தில் ''தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற இந்திய பராலிம்பியன்களின் விளையாட்டுத் திறமையை பரவச் செய்வோம்'' என்ற ஸ்லோகனும் இடம் பெற்றிருந்தது.
அதே வேளையில். விளம்பரத்தில் தமிழக வீரர் மாரியப்பன் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் மாரியப்பன்தான் ரியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வென்று தந்த முதல் பாராலிம்பியன். அப்படியிருக்க மாரியப்பனை ஒதுக்கி விட்டு ஒரு வங்கி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது விளையாட்டு ஆர்வலர்களையும் பொதுமக்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விளம்பரத்தை பார்த்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாரியப்பன் இந்திய வீரர் இல்லையா...இந்தியாவில் தமிழகம் இல்லையா என கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது.

அந்த வங்கியின் சமூக வலைப் பக்கங்களிலும் விளையாட்டு வீரர்களிடையே பாகுபாடு காட்டுவதாக பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்டஸ் இன்ட் வங்கி அந்த விளம்பரத்திற்காக விளக்கம் அளித்துள்ளது. ''எந்த பிராந்திய இன வேறுபாடும் பார்க்கவில்லை என்றும் அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள பாராலிம்பியன்ஸ் அத்தனை பேரும் பெங்களுருவில் உள்ள கோஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக நடத்தும் பாரா சாம்பியன்ஸ் புரோகிராமில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள். அந்த வகையில்தான் விளம்பரப்படுத்தப்பட்டனர். அந்த ஒப்பந்தத்தில் மாரியப்பன் இல்லாத காரணத்தினால், விளம்பரத்தில் இடம் பெறவில்லை'' என விளக்கமளித்துள்ளது.
மாரியப்பனை புறக்கணித்தது ஏன்? மாரியப்பன் பாகிஸ்தானைச் சேர்ந்தவரா இல்லை இலங்கையைச் சேர்ந்தவரா என கார்த்திக் முருகன் என்பவர் அந்த வங்கியிடம் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அந்த வங்கி அளித்துள்ள பதிலில், '' மாரியப்பனின் வெற்றி சிறப்பானது ஆகும். அவரது சாதனைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அதே வேளையில் ஒப்பந்தம் என்ற வகையில் வேறு யாரையும் எங்கள் விளம்பரத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம் '' என வங்கி சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒப்பந்தம் குறித்த ஆன்லைன் இணைப்பையும் பதிலாக அனுப்பியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.