பெப்சிக்கும், கோலாவுக்கும் இடையே நிலவும் போட்டி நாம் அறிந்ததுதான். இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பலமுறை வாங்கிப் பருகியவர்கள்கூட, எந்தக் குளிர்பானம்... யாருடைய தயாரிப்பு என்று தெரியாமல் குழம்பிப் போகும் அளவுக்கு ஒரே மாதிரியான டேஸ்ட்டில், பேக்கிங்கில் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். குளிர்பான விற்பனையில் இவர்களை வீழ்த்த இனி யாராலும் முடியாது என்ற நிலையில் இவர்கள் இருந்தாலும் யாருக்கு முதல் இடம் என்பதில் போட்டி இல்லாமல் இல்லை.
பெப்சிகோ நிறுவனத்தின் பிசினஸை மேலும் விரிவுபடுத்தி முதலிடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற முடிவில் அதன் சி.இ.ஓ இந்திரா நூயி தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறார். பல பில்லியன் டாலர் மதிப்புடைய பெப்சிகோ நிறுவனத்தின் சி.இ.ஓ-வான இந்திரா நூயி, சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சில நாட்களுக்கு முன் இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்திருந்தவர், தென்னிந்தியப் பகுதியில் தேர்ந்தெடுத்த இடம் சென்னை. சென்னை வடபழனியில் உள்ள, நம்ம வீடு வசந்தபவன் ஹோட்டலில் காலை உணவு சாப்பிடுவது திட்டம். அங்கு உள்ள வசந்தபவன் ஹோட்டலுக்கும் பெப்சி நிறுவனத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
சமீபத்தில் பெப்சிகோ நிறுவனத்தின் நியூட்ரிஷியனிஸ்டாக நியமிக்கப்பட்டுள்ள பிரபல சமையல் கலை நிபுணர் விகாஸ் கண்ணாவின் அழைப்பின்பேரில் இந்திரா நூயி வடபழனி வசந்தபவனில் காலை உணவு அருந்தினார். கடந்த 26 வருடங்களாக இவர் சமையல் துறையில் நிபுணத்துவம் பெற்று வருகிறார். இவருடைய சமையலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்திரா நூயிக்குப் பரிமாறுவதற்கான அனைத்து உணவையும் விகாஸ் கண்ணாவே தயார் செய்திருந்தார்.

ஆரஞ்சு நிற இட்லி, ஓட்ஸ் தோசை, குழிப்பனியாரம், ரோஸ் நிறத்தில் ஆப்பம் என அனைத்தையும் செய்துகொண்டு வந்து பரிமாறி அசத்தினார். இந்திரா நூயியும் அவற்றை ரசித்துச் சாப்பிட்டு மகிழ்ந்தார். ஆனால், அவர் வந்தது இவற்றையெல்லாம் சாப்பிடுவதற்காக மட்டுமல்ல.
தென்னிந்திய மக்களின் உணவு முறை, அவர்களுடைய பாரம்பர்ய உணவு வகைகள், தற்போதுள்ள வாழ்க்கை முறை போன்றவற்றை எல்லாம் பார்க்கவே வந்திருந்தார். விரைவில் பெப்சி தனது பிசினஸை, உணவுப் பொருட்கள், தானிய வகைகள் மற்றும் காய்கறிகள் என விரிவுபடுத்த இருக்கிறது.
எந்தவொரு தயாரிப்பையும் வெளியிடுவதற்கு முன் அதற்கான சந்தை இருக்கிறதா, அதனை எந்த மாதிரியான வகையில் மக்கள் நுகர விரும்புகிறார்கள், அதன் பாரம்பர்யம் என்ன, மக்களின் வாழ்க்கை முறை அந்தத் தயாரிப்பை ஏற்றுக்கொள்ள தக்கதாக இருக்கிறதா போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து முடிவெடுப்பதில் கில்லாடியானவர் இந்திரா நூயி.
இவர் தலைமையின் கீழ் இன்னும் பெப்சி, மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.