Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 11, 2016

அழகின் இலக்கணத்தை உடைத்தெறிந்த ரேஷ்மா!


19 வயதான ரேஷ்மா குயிரிஷி (Reshma Quereshi),நம் மனதில் அழகு என்பதற்கு வைத்துள்ள பிம்பத்தை நியூயார்க்கில் FDL Moda பேஷன் நிறுவனம் நடத்திய பேஷன் வீக்கில் உடைத்துள்ளார்.

FDL Moda நிறுவனம் மாற்றுதிறனாளிகளை மாடலாக கொண்டு பேஷனுக்கு புது பரிணாமம் கொடுக்கும் புதுமையான நிறுவனம்

இந்திய ஆடை வடிவமைப்பாளர் அர்ச்சனா கோச்சார் வடிவமைத்த எம்ராயிடரி வேலைப்பாடுகள் நிறைந்த வெள்ளை ஆடையுடன் நியூயார்க்கின் பேஷன்  மேடையில் நடந்த ரேஷ்மா கடந்து வந்த பாதை மிகவும் நீண்டது.

அலகாபாத்தை சேர்ந்த ரேஷ்மா தன் உறவினர் ஒருவனால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி முகம் சிதைக்கப்பட்டு , ஒரு கண்ணையும் இழந்த அபாக்கியவதி பல வலி நிறைந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்றெண்ணிய சமயம் "Make Love not Sacrs" அமைப்பின் அறிமுகம் கிடைத்தது, இந்த அமைப்பு பாலியல்ரீதியிலான ஒடுக்குமுறை குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஒன்று.

ரேஷ்மா இந்த குழுவின் வீடியோ காட்சிகளின் முகவராகிப் போனார்.இதுவரை 1.3 மில்லியன் மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர், இதுவே அவரை நியூயார்க் வரை அழைத்துச் சென்றது. ரேஷ்மாவிற்க்கு அங்கு கிடைத்த பாராட்டுகள் அளப்பரியது





"உலகில் பல நாடுகளில் ஆசிட் வீச்சு நடக்கிறது, கணக்கில் கட்டப்படுவதைவிட உண்மையான எண்ணிக்கை அதிகம்" என்கிறார் லண்டனை சேர்ந்த Acid Survivors Trust Internationalன் (ASTI) இயக்குநர் ஜாவ் ஷா (Jaf Shah).மேலும் அவர் கூறுகையில் "சட்டம் மற்றும் காவல்துறை சரியாக இல்லாத காரணத்தினாலே உலகின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட தங்குகின்றனர்.சுலபமாக கிடைக்கக்கூடிய அமில பொருட்களை தடைசெய்வது,குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பதே இதற்குத் தகுந்த தீர்வு.ரேஷ்மா போன்றோர் அமில வீச்சை எதிர்ப்பது மிகவும் முக்கியம்" எஎன்றார்.

ஆப்கானிஸ்தான், ஈரான், நைஜீரியா, கொலம்பியா போன்ற நாடுகளில் பரவலாக அமில வீச்சு நடந்தாலும், அதிகமான அமில வீச்சு இந்தியாவில்தான் நடைபெறுகிறது. பெரும்பாலும் அமில வீச்சு மண வாழ்க்கை முறிந்த கணவர்கள், நிராகரிக்கப்பட்ட காதலன்களால் நடத்தப்படுகிறது என்று ASTIன் அறிக்கை.

"எனக்கு இது நடக்கிறது என நம்பவே முடியவில்லை , என் வாழ்வின் அதீத சந்தோஷமான தருணம் இது"என்று கூறிய ரேஷ்மா, இந்த பேஷன் வாக்  ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களை ஊக்கப்படுத்தவும், உலகளவில் எளிதாக கிடைக்கூடிய வகையில் உள்ள ஆசிட் பொருட்களை தடைசெய்யவும் ஒரு உந்துகோலாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். "ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவருக்கே தெரியும்  உடலாலும், மனதாலும் ஏற்படும் வலியும் வேதனையும்.இந்த நிலை இனிமேல் யாருக்கும் வரக்கூடாது என்பதே என் லட்சியம்" என்றார் ரேஷ்மா குயிரிஷி

மாற்றம் இனி(தே) ஆரம்பம் ஆகட்டும்.

ரேஷ்மியின் பேஷன் வாக்கை காண :

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.