ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். பெங்களூர்தான் அவரது சொந்த ஊர்.
ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு 'பென்ஸ்' தொழிற்சாலையில் பொருத்துனர் (fitter) ஆக வேலை செய்கிறார். அரைகுறை தமிழில் பேசுவார். பிட்டராக இருந்தாலும் விவரமானவர்; பல துறைகளில் ஞானம் உள்ளவர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் பல அரிய தகவல்கள் கிடைத்தன.
அவர் கூறியது;
சார்.....
இப்போது இந்தியாவிலே 'பென்ஸ்' கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது......
ஆஹா.....
ஜெர்மன் நாட்டு கார் ன்னு பணக்காரர்களும், பெரிய தொழிலதிபர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள். இந்த கார்ல இருக்கற பல முக்கியமான பாகங்கள், கியர்பாக்ஸ் உள்பட, இந்தியாவில், இருக்கும் 'டாடா' (TATA) கம்பெனியிலே செய்து, ஜெர்மனிக்கு வருது. நாங்க அதை அங்கே பொருத்தி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்!
இதுக்கு காரணம் என்ன தெரியுமா?
ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு கூட ஆகாது நம் நாட்டில். நாங்கள், எங்களுக்கு தேவையான டிசைன் மற்றும் மூல பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்....
இங்கே இந்தியாவில் லேபர், ரொம்ப "சீப்". அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, "அட்வான்டேஜ்' ஆகிவிடுகிறது.
இந்தியாவில் லேபர் எவ்வளவு, "சீப்' எனபதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்குங்க சார்...' என்றவர், தன் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்து படித்து காட்டினார்.
அப்படியே ஒரு கனம் அதிர்ந்து போனேன்!
ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு கொடுக்கற சம்பளத்திலே
இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமரத்தலாம்.
இல்லையென்றால்,
தைவான் நாட்டு தொழிலாளி ஐந்து பேரையோ,
பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டு பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்....
ஆனால், இந்தியத் தொழிலாளியின் நிலையோ பரிதாபம்...?
ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் "128" இந்திய தொழிலாளர்கள் (வெட்ககேடு) வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றால் பாருங்கள்.
இந்திய தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 25 ரூபாய் என்றால், ஜெர்மன் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்!
புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் அயல்நாட்டார் தொழில் செய்ய எண்ணற்ற சலுகைகள். அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், இங்கே மூலதனத்தைக் கொட்ட தயங்கப் போறாங்க! கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்...
ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்க்கும் (கேன்ஸர், ஆஸ்துமா போன்று) கேடு விளைவிக்க கூடிய பாதுகாப்பு அம்சம் குறைந்த, ஜெர்மனி நாட்டு சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள்தான் இந்தியாவிற்கு வந்துள்ளன; என்றார் அந்த நண்பர்.
புதிய பொருளாதாரக் கொள்கை என்கிற பெயரில் வெளிநாட்டு குப்பைகளை கொட்ட இந்தியா என்ன குப்பை தொட்டியா?
நம் நாடு அந்நிய நாட்டின் குப்பை கொட்டும் கிடங்கு ஆகாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு இந்தியனின் கடமை அல்லவா...

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.