Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 22, 2016

ஸ்பீடு 250 டெராஃப்ளாப்ஸ்..மெமரி 300 டெராபைட்..அசரடிக்கும் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர்!


பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவும், திறன்வாய்ந்த “சூப்பர் கம்ப்யூட்டர்”  எனப்படும் அதிநவீன கணினியை, அசாம் மாநிலத்திலுள்ள ஐ.ஐ.டி - கவுகாத்தியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் திறந்து வைத்தார்.

பரம்-இஷான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டரை பயன்பாட்டுக்கு திறந்து வைத்த பின் பேசிய அமைச்சர் ஜவடேகர், “நாட்டின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்பிராந்தியம் என அனைத்து பகுதிகளிலும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ள இத்தருணம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சியின் குறியீடாக, அந்நாட்டிலுள்ள தரமான ஆராய்ச்சி மற்றும் அதன் சார்ந்த முன்னேற்றம் என்று கருதப்படும் வேளையில், நம் நாட்டின் நவீன கோவில்களான ஐ.ஐ.டி.க்களை, அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவது என்னும் சவாலை நிறைவேற்றுவதன் மூலம் இங்குள்ள கல்வி நிறுவங்களின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் கற்றல் திறன்கள் மேம்படும்” என்று அவர் மேலும் கூறினார்.



ஐஐடி-கவுகாத்தியின் இயக்குநர், பேராசிரியர் கவுதம் பிஸ்வாஸ் பேசும்போது, “புதியதாக நிறுவப்பட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டரான பரம்-இஷான் 250 டெராபிளாப்ஸ் வேகம் மற்றும் முந்நூறு டெரா பைட்டுகள் மெமரி கொண்டது. மேலும் இந்த சூப்பர் கம்ப்யூட்டரானது வெறும் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமின்றி தகுதி வாய்த்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் மற்றும் ஈர்க்கும் இடமாகவும் இருக்கும்” எனக் கூறினார்.

இந்த சூப்பர் கம்ப்யூட்டரானது வேதியியல் கணக்கீடுகள், திரவ இயக்கவியல், மின்காந்தம், கட்டிட பொறியியல் கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தேர்வுமுறைகளில் மட்டுமல்லாது வானிலை, சீதோஷ்ணநிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பு போன்றவைகளிலும் பயன்படுமென்பது குறிப்பிடத்தக்கது. நிலம் முதல் ஆகாயம் வரை, ஒரு செல் உயிரிகள் முதல் மனிதன் வரை பல்வேறுபட்ட தகவல்களை திரட்டுவதற்கும் அதை பகுப்பாய்வு செய்வதற்கும் சூப்பர் கம்ப்யூட்டர் என்னும் அதிநவீன கணினிகள் அவசியமானது. சூப்பர் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உலகளவில் அமெரிக்கா, ஜப்பான், சீனா  மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா அந்த பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும் 73 சூப்பர் கம்ப்யூட்டர்களை அமைப்பதற்காக 4500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.