முதல்வர் ஜெயலலிதா சொன்னால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று சசிகலா புஷ்பா கூறி உள்ளார்.
"என் தலைவர் என்னை அறைந்தார்... பெண் பாதுகாப்பு எங்கே இருக்கிறது" என்று கண்ணீர் மல்க மாநிலங்களவைத் தலைவரிடம் அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா முறையிட்டது, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. அதன்பின் அவர், ஆங்கில ஊடகங்களின் முக்கிய செய்தியாகவும் மாறிப்போனார்.
இதை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். மேலும், சசிகலா புஷ்பா மீதும் அவரின் கணவர், மகன் ஆகியோர் மீதும் தூத்துக்குடியில் இளம்பெண்கள் அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
மேலும் சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வேலுமணி தள்ளுபடி செய்தார். வக்காலத்தில் வேறு நபர் கையெழுத்திட்டது தொடர்பாக சசிகலா புஷ்பா மீது ஒத்தகடை காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். மேலும், சசிகலா புஷ்பாவை 6 வாரத்துக்கு கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியை அடுத்த அம்மன்புரத்தில், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேஷ் பண்ணையாரின் 13-வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் நேற்று சசிகலா புஷ்பா எம்.பி. அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கும் ஆலைகளால் விவசாயம் அழிந்து விட்டது. விவசாயம் சார்ந்த தொழில்களும் நலிந்து விட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மத்திய கல்வி வாரிய புத்தகத்தில் (சி.பி.எஸ்.இ.) 9-ம் வகுப்பு பாடத் திட்டத்தில் நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தி அவதூறாக உள்ளது. அந்தப் பகுதியை நீக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்படவில்லை. மாநிலங்களவையில் இது தொடர்பாக நான் குரல் கொடுப்பேன்.
முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. அவர் என்னைவிட வயதில் மூத்தவர். அவர் விரைவில் குணம் அடைய வேண்டும். எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதாவின் பின்னால் இருப்பவர்கள்தான் கூறுகின்றனர். முதல்வர் ஜெயலலிதா நேரில் என்னிடம் கேட்டுக் கொண்டால், எனது எம்.பி. பதவியை நான் ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.