“அ.தி.மு.க வில் அமைச்சராக வேண்டுமா? சட்டசபையில் கலக்கவேண்டும் என்பது, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் அறிந்திருக்கும் அறிச்சுவடி”. அதற்கு உதாரணம் தான், இன்றைய அமைச்சர் விஜயபாஸ்கர்.கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்த டாக்டர் விஜயபாஸ்கரை சட்டமன்றத்தில் பேசுவதற்கு சபாநாயகர் அழைக்க , கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டார் விஜயபாஸ்கர்.
அன்றைக்கு எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்தை தண்ணியிலே இருப்பவர் என்றும், முதுமையின் காரணமாக தள்ளுவண்டியில் கட்சி பணியாற்றி வரும் கருணாநிதியை “ தள்ளுவண்டி” என்றும் சட்டசபையை அ.தி.மு.க வின் மேடையாக நினைத்து பேச, அதற்கு முகம்சுளிக்க வேண்டிய முதல்வரோ, முகமலர்ச்சியோடு அந்த பேச்சை மேஜையை தட்டி ரசித்தார். அந்த பேச்சின் தாக்கம் தான் மறுவாரமே அமைச்சரவை மாற்றியமைக்கபட்டு, தன்னை ரசிக்க வைத்த பேச்சாளரான விஜயபாஸ்கருக்கு சுகாதார துறையை வழங்கி இன்றுவரை துறைமாறா அமைச்சராக இருந்துவருகிறார் . அமைச்சர் பதவியை இப்படியும் பிடிக்கலாம் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு ரூட் போட்டு கொடுத்தவர் விஜயபாஸ்கர் எனலாம்..
அ.தி.மு.க தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க இந்த முறை அமைச்சரவை பட்டியலில் எப்படியும் இணைந்து விடவேண்டும் என்ற வேட்கை புதிதாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதல், பழைய எம்.எல்.ஏக்கள் வரை அனைவருக்கும் இருந்தது. ஆனால் 33 மட்டும் தான் அந்த வாய்ப்பு என்பதால் அதை பற்றி பிடிக்க பலயுக்திகளை கையாண்டனர். அதில் ஒரு யுக்தியாக சட்டசபையில் கலக்குவது என்ற முடிவுக்கு வந்தனர். மானியகோரிக்கையில் பேச வாய்ப்பு கிடைக்காத, என்ற ஏக்கம் ஒவ்வொரு அ.தி.மு.க உறுப்பினருக்கும் இருந்தது. வாய்ப்பு கிடைத்தவர்கள் துறையை பற்றியோ, தங்கள் தொகுதியை பற்றியோ பேசுவதை விட முதல்வரை எப்படி குளிர்விக்கலாம் என்று பேசுவதில் தான் ஆர்வம் காட்டினார்கள் “ அடுத்த ஜென்மத்தில் எங்கள் புரட்சி தலைவி அம்மாவிற்கு தான் நான் மகனாக பிறக்கவேண்டும்” என்று ஒரு எம்.எல்.ஏ பேசினால், “ உருப்படவே மாட்ட என்று என்னை பெற்ற அம்மா சொன்னார். ஆனால் என்னை எம்.எல்.ஏவாக ஆக்கி, பெற்ற அம்மாவையே என்னை பற்றி புகழவைத்தவர்.எங்கள் புரட்சி தலைவி அம்மா” என்று இன்னொரு உறுப்பினர் புகழ்கின்றார். இந்த புகழ்ச்சியை எந்த சலனமும் இல்லாமல் ரசிப்பது தான், அ.தி.மு. க உறுப்பினர்களை குதுகுலுக்க வைத்து இன்னும் புகழவேண்டும் என்று ஆசையை அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. புகழ்மன்றமாக இருந்த சட்டமன்றத்தில் “ புள்ளிவிவரமாக பேசிய பாண்டியராஜன் பேச்சு முதல்வருக்கு பிடிக்க அவருக்கு அடித்தது யோகம்.கிடைத்தது அமைச்சர் பதவி”.

உறுப்பினர்கள் தான் அமைச்சாரக வேண்டும் என்றவேட்கையில் புகழ் பாடுகின்றார்கள் என்றால், அமைச்சர்களோ, தங்கள் பதவியை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் புகழ்ந்து தள்ளுகின்றனர். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு,போன்றவர்கள் பாட்டுபாடி முதல்வரை புகழ்ந்தனர். பிற்படுத்தபட்டோர் துறை அமைச்சரான வளர்மதி தனது துறை மானியக்கோரிக்கையின் போது ஐந்து பக்கத்தில் “தாயே என்று ஆரம்பித்து.. எங்கள் அம்மாவே..’’ என ஐந்து பக்கத்தில் கவிதை எழுதி வந்து அதை முழுவதும் தனது மானியக்கோரிக்கையில் வாசித்து முடித்தார்.
ஆதிதிராவிட துறை அமைச்சரான ராஜலெட்சுமியோ,தனது பேச்சை அவையில் இருந்து கேட்ட ஜெயலிலதாவையும் உருக வைத்து ஸ்கோர் செய்தார். ஆதிதிராவிட துறையின் மானியக்கோரிக்கைக்கு பதில் அளித்து பேச எழுந்த அமைச்சர் ராஜலெட்சுமி “காலனியில் பிறந்த என்னை.. காலிணி இல்லாமலே வளர்ந்த எனக்கு.. இன்று என்வீட்டிற்கே இரண்டு காவலர்களை காவலுக்கு நிறுத்தியவர்.. எங்கள் புரட்சி தலைவி அம்மா” என்று சொல்லி தழுதழுத்தார்.இவரின் இந்த பேச்சை கேட்டு முதல்வர் ராஜலெட்சுமியை உருக்கமாக பார்க்க,தொடர்ந்து பேசமுடியாமல், தழுதழுத்த குரலில் ராஜலெட்சுமி “காலினியிலிருந்து வந்த என்னை இந்த துறைக்கு அமைச்சராக்கி, இன்று ஆதிதிராவிட துறையை 'ஜோதி'திராவிட துறையாக மாற்றி காட்டியவர்” என்று பேச நிசப்தம் நீங்கி சபைில் மேஜை தட்டும் எழுந்தது. அமைச்சர்கள் அனைவரும் இதை சென்டிமென்டாக பாரக்க... எம்.எல்.ஏக்களின் முகத்திலோ. நாமும் இப்படி பேசயிருக்கலாமே என்ற ஏக்கம் தெரிந்தது.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீ

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.