ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி மற்றும் வெண்கலப்பதம் கிடைத்தது. கடந்த 2015ம் ஆண்டு மார்ச் முதல், இந்த ஆகஸ்ட் 22ம் தேதி வரை டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் கீழ் 36.85 கோடி ரூபாய் வீரர்- வீராங்கனைகளுக்காக செலவழிக்கப்பட்டுள்ளதாக கணக்கு கூறப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளுக்கும் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
ரியோ ஒலிம்பிக்கை பொறுத்தவரை 36 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், 4x400 தொடர் ஓட்டத்தில் பங்கேற்றக் குழுவினருக்கு மட்டும் அதிகபட்சமாக 2.92 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தகுதி சுற்றில் ஓடிய டைமிங்கைக் கூட எட்ட முடியாமல், 2 விநாடிகள் குறைவாக ஓடி, முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவியது. இவர்கள் தவிர வட்டு எறிதல் வீரர் விகாஷ் கவுடாவிற்கு ரூ.1.02 கோடி செலவழிக்கப்பட்டது. இவரால் 28வது இடமே பிடிக்க முடிந்தது. வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியாவுக்கு 53.98 லட்சமும் செலவழிக்கப்பட்டது. இவரால் 20வது இடமே பிடிக்க முடிந்தது. டின்டு லூகா பயிற்சிக்கு 23.45 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. இவரும் ஹீட்சிலேயே வெளியேறி விட்டார்.
குத்துச்சண்டையில் 3 வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். இதில், அதிகபட்சமாக ஷிவ தபாவுக்கு 56.89 லட்சம் செலவழிக்கப்பட்டது. முதல் சுற்றிலேயே ஷிவ தபா தோல்வியடைந்தார். துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்தம் 12 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் அபினவ் பிந்த்ரா பயிற்சிக்காக 2.37 கோடி செலவழிக்கப்பட்டிருந்தது. இவரால் 4வது இடமே பிடிக்க முடிந்தது. இது தவிர, ஹீனா சித்து 1.71 கோடி, மானவ்ஜீத் சாந்து 1.36 கோடி, அயோனிகா பால் 1. 29 கோடி, வி.என். பிரகாஷ் 1.27 கோடி, சையின் சிங் 1.25 கோடி, ககன் நரங் 1.17 கோடி, அபூர்வி சண்டிலா 1.05 கோடி , ஜீது ராய்க்கு 1.04 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் அதிக செலவு பிடிக்கும் விளையாட்டு துப்பாக்கி சுடுதல்தான். எல்லாமே இறக்குமதி செய்யப்பட்டடவைதான். சிட்னி ஒலிம்பிக்கிற்கு பிறகு முதன் முறையாக ரியோ ஒலிம்பிக்கில்தான் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் பதக்கம் கிடைக்கவில்லை.
பேட்மின்டன் பிரிவில், 7 இந்திய வீரர் - வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். இதில் சிந்துவுக்குதான் குறைந்த பட்சமாக 45.27 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. ஜுவாலா கட்டாவுக்கு 46.73 லட்சமும் ஸ்ரீகாந்துக்கு 58.51 லட்சமும் அஸ்வினி பொன்னப்பாவுக்கு 46.53 லட்சமும் சுமீத் ரெட்டிக்கு 45.45 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. டென்னிசில் சானியா மிர்ஷா மற்றும் ரோகன் போபண்ணா இருவரும் கலப்பு இரட்டையரில் பங்கேற்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்கள் இருவருக்கும் தலா 60 லட்சம் என ஒரு கோடியே 20 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் போட்டியில் இருவர் பங்கேற்றனர். இதற்கு 8.53 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. டேபிள் டென்னிசுக்கு 1.05 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி அணி வீரர்களுக்கு அலவான்சாக 1.16 கோடி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக செலவழிக்கப்பட்டது தனி. வெயிட் லிப்டிங்கில் டார்கெட் ஒலிம்பிக் போட்டியத்தின் கீழ் யாரும் இடம் பெறவில்லை. ஆனால், பங்கேற்ற இருவரின் பயிற்சிக்காகத் தலா 31 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது.
கோல்ப்புக்கு 6.91 லட்சமும் வில்வித்தைக்கு 1.27 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இதில், தீபிகா குமாரிக்கு மட்டும் 35. 92 லட்சம் செலவழிக்கப்பட்டது. காலிறுதியில் தீபா தோற்றார். மல்யுத்த வீரர்களுக்காக 2.52 கோடி செலவிடப்பட்டது. மொத்தம் 8 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர். யோகேஷ்வர்தத்துக்கு 49.01 லட்சம் அதிகபட்சமாக செலவழிக்கப்பட்டது. வெண்கலம் வென்ற சாக் ஷி மாலிக் பயிற்சிக்காக 15.86 லட்சம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த வினேஷ் போகத்துக்கு 36. 65 லட்சமும் பபிதா குமாரிக்கு 31.74 லட்சமும் செலவழிக்கப்பட்டிருக்கிறது.
படகு வலித்தல் போட்டியில் இந்தியாவின் தத்து போகனல் பயிற்சிக்காக 26.13 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளது. தத்து 13வது இடம் பிடித்தார். படகு வலித்ததில் இநதிய ஒலிம்பிக் வீரர் ஒருவரின் மிகச்சிறந்த பெர்ஃபார்மான்ஸ் இது. தீபா கர்மாகருக்கு 12. 98 லட்சம் செலவிடப்ட்டது. ஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவில் 4வது இடம் பிடித்து அசத்தினார். ஜுடோவில் அவதார் சிங்கிற்கு 12.09 லட்ச்ம் செலவிடப்பட்டது. முதல் சுற்றிலேயே தோற்றுப் போனார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.