பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர், இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்பச் செலுத்தவில்லை. இதையடுத்து, மார்ச் மாதம் 2-ம் தேதி விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விஜய் மல்லையா ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மத்திய அரசு, மல்லையாவின் பாஸ்போர்ட்டையும் முடக்கியது. அவருடைய எட்டாயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும், எந்த வழக்கிலும் நேரில் ஆஜராகாமல் மல்லையா தவிர்த்து வருகிறார். இந்த நிலையில், மல்லையா தன்னுடைய ‘கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனம் மூலம் சேவைவரித் துறையிடம் 532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இதனை மீட்கக்கோரியும், மல்லையாவின் தனிப்பட்ட விமானத்தை ஏலம் விடக்கோரிய (இந்த விமானத்தின் விலையில் 80 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே ஏலம் கேட்கப்படுகிறது என்பதால்) உத்தரவைத் திரும்பப்பெறவும் சேவைவரித் துறை சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி மற்றும் பி.பி.கொலப்வாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சி.தர்மாதிகாரி, ‘‘மல்லையாவின் நிறுவனத்துக்கு, ‘கிங்ஃபிஷர்’ என்ற பெயர் எப்படி வந்தது என யாருக்காவது தெரியுமா? யாரும் இதுபோல் தனது நிறுவனத்துக்குச் சரியான பெயர் வைத்ததாக வரலாறு இல்லை. ‘கிங்ஃபிஷர்’ பறவை உலகில் எங்கு வேண்டுமானலும் பறக்கமுடியும். அதற்கு, எல்லைகள் இல்லை. எந்த எல்லையும் அதைத் தடுக்கமுடியாது. அதுபோலத்தான், மல்லையாவும் இருக்கிறார். அவரையும் யாரும் தடுக்க முடியவில்லை’’ எனத் தெரிவித்தார்.
இந்த மனு மீதான விசாரணை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.