யுடு(yutu) அப்படினா என்ன?. சபாலா னா என்ன?. சுர்ஜித் தொடர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது... இப்படியெல்லாம் ஒன்றாம் கிளாஸ் குழந்தைகளிடம் கேள்வி கேட்டால் ,எந்த குழந்தை பதில் சொல்லும். கர்நாடாகாவின் ஐசிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களின் உலக நடப்பு திறன் அறியும் சோதனைக்காக இது போன்ற கடினமான கேள்விகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த பள்களில் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கானத் தேர்வு செப்டம்பர் 1 முதல் 9ம் தேதிகளுக்குள் இரு கட்டமாக நடைபெறவுள்ளது.அதற்கு குழந்தைகளை இப்படி தயார் செய்கிறார்களாம்.குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பிற கேள்விகளை பார்த்தால் இன்னும் மலைத்து போய் விடுவீர்கள்.
கடந்த 2015 ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச தலைவர்கள் மாநாட்டில் சிறந்த மனிதருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது?
மத்திய பாதுகாப்பு மற்றும் புள்ளியியல் கழகம் எந்த நகரில் அமைந்துள்ளது?
தான்சானியா ஜனாதிபதி யார்?
மத்திய கலால் வரித்துறை ஆணையரின் பெயர் என்ன?
இங்கிலாந்து நாட்டுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய இந்திய தூதரரின் பெயர் என்ன?
நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதி யார்?
பெட்ரோல் தட்டுப்பாட்டை தீர்க்க நேபாளம் எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது?
இந்தியா- இலங்கை கடற்படை ஒத்திகையின் பெயர் என்ன?
எந்த இந்திய மாநிலம் வேலை வாய்ப்பில் 33 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்கியுள்ளது?
இணைய சுதந்திர விதிகளின் படி எந்த நாடு தனது மக்களுக்கு அதிக உரிமை அளித்துள்ளது?
பனிபூர்வதா சஞ்வீவினி யோஜனா திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
பயிற்விதைகள் மாநாடு எந்த நகரில் நடைபெறுகிறது?
தேசிய ஒற்றுமை தினம் எந்த தேதியில் கடைபிடிக்கிறோம்?
உலக வங்கியின் அறிவிக்கைப்படி எந்த நாட்டில் எளிதாகத் தொழில் தொடங்க முடியும்?
எந்த நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் இணைய பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இது சும்மா சேம்பிளுக்குத்தான் பாசு. இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு. இந்த கேள்விகளை பார்த்தா... பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனே தெறிச்சு ஓடிருவான். கர்நாடகாவில் பல அம்மாக்கள் கொதிச்சுட்டாங்க. சஹானா ராவ் என்பவர். ' உங்களுக்கு நான் வந்து எக்ஸாம் எழுதுறேனு' ட்விட்டரில் பதில் போட்டுருக்காங்க. இப்போது அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் குரல் எழுந்துள்ளது. முடிஞ்சா நீங்களும் பதில் சொல்லிப் பாருங்க...!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.