எல்லா வசதிகளையும் கொண்ட டிஜிட்டல் கேமராவை ஒரு ஸ்லிம்மான செல்லுக்குள் அடக்கினால் எப்படி இருக்கும். உண்மையிலேயே நடந்துவிட்டது. 'ஹாசல்பிளாட் கேமரா' (Hasselblad) என்ற கேமரா ஒரு சின்ன மொபைலுக்குள் அடங்கிவிட்டது. நம்மில் பெரும்பாலோனோர்க்கு 'ஹாசல்பிளாட்' கேமரா (Hasselblad) பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போட்டோகிராபி துறையில் பல சாதனைகள் புரிந்த நிறுவனம் ஹாசல்பிளாட். நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங் சென்ற பொழுது நிலவில் படம் பிடிக்க நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்த நிறுவனத்தின் கேமராக்கள்தான். இந்த நிறுவனத்தின் கேமராக்களின் விலையை கேட்டால் சற்று மலைப்பாகத்தான் இருக்கும். இதனால்தான் என்னவோ இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
அப்பேற்பட்ட கேமராவை இனி நம் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம். மோட்டோ நிறுவனமும் ஹாசல்பிளாட் நிறுவனமும் இணைந்து இந்த புது தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளனர். 'ஹாசல்பிளாட் ட்ரூ சூம்' (Hasselblad True Zoom) என்றழைக்கப்படும் டிஜிட்டல் கேமரா போன்ற சாதனத்தை நம் மோட்டோ ஸ்மார்ட் போனுடன் பிரத்யேக காந்தங்கள் மூலம் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த தொழில்நுட்பம் மோட்டோவின் Z சீரிஸ் மொபைல்களில் மட்டுமே பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை 'மோட்டோ மாட்' (Moto Mod) என்று அழைக்கின்றனர்.
இந்த 'ஹாசல்பிளாட் ட்ரூ சூம்'ன் 12 எம்.பி கேமராவினால் 1080p HD வீடியோவும் எடுக்க முடியும். இது வழங்கும் இன்னொரு அம்சம், இதனை பயன்படுத்தி நாம் புரபசனல் கேமராவில் உள்ளது போல் RAW மோடில் படம் பிடிக்க முடியும். இவ்வாறு RAW மோடில் எடுக்கப்பட்ட படங்களை ஹாசல்பிளாட் கேமராவின் போக்கஸ்(Focus) மூலம் எடிட் செய்து அட்டகாசமான புகைப்படங்களைப் பெறலாம். இதில் பளிச்சென்ற 'xeon' பிளாஷ் அம்சமும் அடக்கம். இதனின் ஜும் திறன் 25 - 250mm வரை இருக்கும். வெளிச்சம் குறைவான இடத்தில்கூட திறம்பட செயலாற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சென்ஸார் 3200 ISO வரையில் படம் எடுக்கக்கூடியது.
போட்டோகிராபி துறையில் ஒரு ஜாம்பவானான Hasselblad-ன் இந்த புதுக் கண்டுபிடிப்பிற்கு புகைப்படக் கலைஞர்களிடையே பெறும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த Moto Mod இந்த மாத இறுதிக்குள் சந்தைக்கு வரவுள்ளது, விலை 15,000 - 20,000-க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.