தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினக்கூலி ரூ.350 ஆக உயர்த்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 2–ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மத்திய தொழிற்சங்கங்களுடன் அமைச்சகங்களுக்கு இடையேயான குழு சந்திப்புகளை நடத்தியது. தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன. அவற்றில் சில தொழிலாளர்கள் தொடர்பானவை. சில, பொருளாதார கொள்கை தொடர்பானவை. அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் சிபாரிசின்படி, மத்திய அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி, பயிற்சி பெறாத, பண்ணை சாராத தொழிலாளர்களின் (‘சி’ பிரிவினர்) குறைந்தபட்ச தினக்கூலியை, ரூ.350 ஆக உயர்த்துவதற்கு (தற்போதைய தினக்கூலி ரூ.246) முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைவராக கொண்ட குறைந்தபட்ச கூலி ஆலோசனை வாரியத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்களை பதிவு செய்வதும், அவர்களை பணிக்கு அமர்த்தும் முகவர்களை (ஏஜென்சிகள்) பதிவு செய்வதும் கட்டாயம் ஆக்கப்படுகிறது. அவற்றை மாநில அரசுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்படும். தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது விதிமுறை மீறலுக்கு ஏற்றபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைப்புசாராத தொழிலாளர்களுக்கு (அங்கன்வாடி, மதிய உணவு, கல்விக்கான ஆஷா தன்னார்வ ஊழியர்கள்) சமூக பாதுகாப்பு அளிப்பது பற்றி குழு அமைத்து பரிசீலிக்கப்படும். அந்தக் குழு தனது அறிக்கையை விரைவில் அளிக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும். வங்கிகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன்தான் அவற்றை இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதில் பணியாளர்களின் நலன் எந்தவகையிலும் பாதிக்கப்படாது. எனவே, இதில் தொழிற்சங்கங்கள் தலையிட வேண்டிய தேவையில்லை
மேலும், திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2014–15, 2015–16 ஆண்டுகளுக்கான போனஸ் வழங்கப்படும். போனஸ் திருத்த சட்டம், கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். போனஸ் வழங்குதல் தொடர்பாக உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்கும். போனஸ் வழங்குவதால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,920 கோடி செலவு பிடிக்கும்" என்றார்.
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன. மேலும், நாடு முழுவதும் திட்டமிட்டபடி செப்டம்பர் 2-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் அச்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து டெல்லியில் ஏ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அரசு அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு போதாது. அறிவித்தபடி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்கு அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.