கடலூர், விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் நில அதிர்வை உணர்ந்த மக்கள், நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதாக பீதியடைந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர். ஆனால், நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் நில அதிர்வை உணர்ந்த மக்கள், நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதாக பீதியடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி வினைதீர்த்தாபுரம் பங்காரம் கா.அலம்பலம், உளுந்தார்பேட்டை பகுதி, விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் மற்றும் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக கூறினர்.

மேலும், பெரம்பலூர், துறைமங்கலம், கோனேரிப்பாளையம், எசனை, வேப்பந்தட்டை, கவுள்பாளையம், பேரளி, நன்னை, லப்பைக்குடிகாடு, திருப்பெயர் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வை உணர்ந்த மக்களும் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறிய அச்சத்துடன் தெருக்களில் திரண்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலைகளில் கூடியிருந்த மக்கள், நில அதிர்வை தாங்கள் உணர்ந்தது பற்றி ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர். சில வினாடிகள் நீடித்த, இந்த நில அதிர்வினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதேபோல், நேற்று ஹரியானா மாநிலம் மற்றும் டெல்லியிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 என்ற அளவில் பதிவானது.
தமிழகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் இயங்கி வரும் நிலநடுக்கப் பிரிவின் இயக்குநர் என்.மீனாட்சிநாதன் கூறும்போது, ''சென்னை, கொடைக்கானல் மற்றும் சேலம் ஆகிய மூன்று இடங்களிலும் நில அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவிகளை நாங்கள் அமைத்துள்ளோம். ஆனால், நள்ளிரவு ஏற்பட்ட நில அதிர்வானது, இந்த மூன்று இடங்களிலுமே எங்கும் பதிவாகவில்லை.

இந்தக் கருவிகள் மூலம் பெறப்படும் தகவல்கள் அனைத்தும், டெல்லியில் இருக்கும் வானிலை ஆய்வு மையத்தால் ஒவ்வொரு வினாடியும் பெறப்பட்டு, கண்காணிக்கப்படும். ஆனால், அங்கும் இந்த நில அதிர்வு குறித்த எந்தத் தகவலும் பதிவு செய்யப்படவில்லை. இதனை நள்ளிரவே நாங்கள் சோதனை செய்துவிட்டோம். இது மிகவும் சிறிய அளவிலான நில அதிர்வுதான். இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
இதேபோல், நேற்று டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கமும் சிறிய அளவிலான நிலநடுக்கம்தான். அது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. அந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நேரமும், தமிழகத்தில் நிலஅதிர்வு ஏற்பட்ட நேரமும் வெவ்வேறு என்பதால் அதற்கும், இதற்கும் எவ்விதத தொடர்பும் இல்லை. மிகவும் சிறிய அளவிலான நில அதிர்வுகள் உண்டாகும்போது, அவை அப்பகுதி மக்களால் மட்டுமே உணர முடியும். நிலநடுக்கத்தை அளக்கும் கருவிகளில் அவை பதிவாகாது. அந்தப் பகுதியை சுற்றியிருக்கும் குவாரிகள் போன்றவற்றால்கூட இவை ஏற்பட்டிருக்கலாம். அதனால், மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.