பல நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பிரான்ஸ் அரசாங்கமும் இதற்கு தடை விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டிற்குள் அனைத்து வகையான பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் தட்டுக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்கிற புதிய சட்டம் 2020 ம் ஆண்டில் அமலுக்கு வருகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இதற்கு பல சுகாதார அமைப்புகளும் ஆமோதித்திருக்கும் நிலையில், சில ஐரோப்பிய யூனியன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஐரோப்பிய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கங்கள் இந்த சட்ட அமலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் மீது சட்டப்படி வழக்குத் தொடருவோம் என ஐரோப்பிய பொது செயலாளர் Eamonn Bates தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பயாலஜிக்கலாக சுற்றுச்சூழலை பிளாஸ்டிக் பொருட்கள் பாதிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், இந்த முடிவால் மக்களிடையே சலசலப்பையும், தவறான முடிவுகளையும் எடுக்க வைக்கலாம்' எனவும் தெரிவித்துள்ளார்.
இதே போல, கடந்த வருடம் அழகு சாதனம் மற்றும் சுய பராமரிப்பு பொருட்களில் பிளாஸ்டிக்கால் ஆன நுண் மணிகளை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டது. சுத்திகரிப்பு மற்றும் தொழிற்சாலை சாதனங்களில் நுண் மணிகளை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கவும் பரிசீலித்து வருகிறது.
இந்த நுண் மணிகள் இறுதியாக கடலில் கலக்கும் போது, உணவு சங்கிலிக்குள் நுழைந்து விடுகிறது. இதனால், கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுவதாக அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரான்ஸ் அரசின் இந்த திட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, பெங்களூரில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 15ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது என அப்போதைய கர்நாடக அமைச்சர் கே ஜே ஜார்ஜ் தெரிவித்துள்ளார். "40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்துள்ளோம். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும்போது ஏற்படும் காற்றினால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. இதனால், இயற்கை மாசுபாடு அடைந்து வருகிறது. மேலும், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு போன்ற பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்கா, டென்மார்க் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறியும் பயன்படுத்துவோருக்கு அதிகளவு வரியும் விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகளால் அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதுபோல் நம் நாட்டில் அதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும். இதற்கென தனியே கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக தலைமைச் செயலர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலர், நகராட்சி நிர்வாகச் செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை எட்டு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான வழி குறித்து சமூக ஆர்வலர் நித்யானந்த ஜெயராமனிடம் பேசினோம், ''அரசுக்கு எதில் வருவாய் வருகிறதோ அதில்தான் கவனம் செலுத்தும் என்பது எல்லோரும் தெரிந்ததுதான். இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ரிலையன்ஸ். பிளாஸ்டிக் பேக் முதல் தெர்மாகோல் வரை எதில் கை வைத்தாலும் அரசுக்கு அதன் மூலம் இழப்பு ஏற்படும். அரசுக்கான வருவாய் பறிபோகும் என்பதால் இதன் மீதான தடையை கொண்டு வர அரசாங்கம் முயற்சி செய்வதில்லை. 1991-1996 வரையிலான ஜெயலலிதா ஆட்சியின்போது மழை நீர் சேகரிப்பு எப்படி கட்டாயமாக்கப்பட்டதோ, அதேபோல பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் வைக்கப்பட்டது. முக்கியமாக சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தடை செய்வதற்கான மசோதா ஒன்று பேரவை வரை சென்றது. அதை அமல்படுத்துவார்கள் என்கிற மிகப்பெரும் எதிர்பார்ப்போடு பலரும் இருந்தோம். ஆனால் அது அமலுக்கு வரவில்லை. மக்களின் பாதுகாப்பிற்கான பெரும்பாலான சட்டங்களுக்கு சட்டசபையில் மதிப்பில்லை. அவர்களுக்கு சூழல் மீது என்ன அக்கறை? மக்கள் மீது என்ன அக்கறை?' என்றார்.
இதே போல 2015 டிசம்பர் மாதத்தில் சென்னையையே புரட்டிப் போட்ட மழையில் மிகபெரும் சுகாதாரக் கேடாக இருந்தது பிளாஸ்டிக் பொருட்கள்தான். மக்காத தன்மை கொண்ட இந்த பிளாஸ்டிக் பொருட்கள் கடல் நீருடன் கலப்பதன் வாயிலாக கடல் வாழ் உயிரினங்கள் பெரும் அளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. நிலப்பரப்பில் மண்ணில் மட்காத குப்பையாக மாறி பல நோய்களுக்கும் காரணமாகின்றன என பல சமூக ஆர்வலர்கள் புலம்பியதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதற்கான உதாரணம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.