Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 4, 2016

'ஆன்டி-பாக்டீரியா' சோப்புகளுக்கு அமெரிக்காவில் தடை!


பார்க்க பளபளப்பாக ஆடம்பரமாக 'ஆன்டி-பாக்டீரியல்' என காட்டப்படும் சோப்புக்கள்தான் இன்று மக்கள் மத்தியில் பிரபலம். ஆன்டி பாக்டீரியல் என்பதை கவுரமாககூட பார்க்கும் நிலையும் மக்களிடையே நிலவி வருகிறது. ஆன்டி-பாக்டீரியலை அத்தியாவசியமாக பார்க்கும் மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி. அமெரிக்கா, சில கெமிக்கல்களை உபயோகப்படுத்தி உருவாக்கப்படும்  ஆன்டி-பாக்டீரியல் சோப்புகளுக்கு தடைவிதித்துள்ளது.

   கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க மத்திய அதிகாரிகளின் கூட்டத்தில் சாதாரண சோப்பையும், தண்ணீரை விடவும், ஆன்டி பாக்டீரியல் சோப்புகளில் கெமிக்கல்கள் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி, ஆன்டி பாக்டீரியல் சோப்புக்கள் கிருமிகளை கொல்லத் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. பொதுவாக ஆன்டி பாக்டீரியா என சொல்லக்கூடிய சோப்புக்கள் கிருமிகளை அழித்து ஆரோக்கியத்தை காக்க வேண்டும். ஆனால் இந்த ஆன்டி-பாக்டீரியல் சோப்புக்கள் 'ஆன்டி-பாக்டீரியல்' என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் இந்த சோப்புக்களே அதிக தீங்குகள் விளைவிப்பதாகவும், 19 வகையான கெமிக்கல்களை உபயோகப்படுத்திய சோப்புக்களை தடை செய்வதாகவும் அறிவித்துள்ளது.



உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தை சேர்ந்த டாக்டர்.ஜேனட் உட்காக் "சாதாரண சோப்பையும், தண்ணீரை விட நன்றாக இருக்கும் என்ற சான்றை ஆன்டி-பாக்டீரியல் சோப்புகள் நிரூபிக்கவில்லை" என்கிறார். அமெரிக்காவின் பிரஸ் அச்சோசியேட் முடிவில், "விலங்குகளில் ஆராய்ச்சி செய்யும்போது, டிரைகுளோசான் மற்றும் ட்ரிகுலோகார்பன் ஆகியவை விலங்குகளின் ஹார்மோன்களை பாதித்தன. நீண்ட நாட்களாகவே ரசாயனங்கள் எங்களின் கன்காணிப்பில் இருந்தது. இதனால் பல நிறுவனங்களில் முன்பே சோதனை மேற்கொண்டு அகற்றிவிட்டோம்" என்கிறது.

 இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள, FDA (Food and Drug Administration), "இந்த ரசாயனபொருட்களின் தன்மையை நிரூபிக்க போதுமான காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கெமிக்கல்கள் அனைத்தும் நோய்எதிர்ப்புத்தன்மை வாய்ந்தது என்பதனை நிரூபிக்கவில்லை. ஆன்டி-பாக்டீரியல் எனப் பெயரிடப்பட்டு, குறைந்தபட்சம் 2,000 பொருட்களில் - டிரைக்ளோசான் கெமிக்கல் 93 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது" என்கிறது.

ஆன்டி-பாக்டீரியல் சோப்பா...உஷாரா இருங்க பாஸ்...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.